Monday, December 30, 2013
சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு நடராஜர் கோவில் தெற்கு வாசலை முற்றுகையிட சென்றனர். போராட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாதிவழியில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
நடராஜர் கோவிலை முற்றுகையிட முயன்ற கோ.ராமகிருஷ்ணன் உள்பட 115 பேரை போலீசார் கைது செய்தார்கள்.
Source : WebDunia
சிதம்பம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்குவாயிலை திறக்கக் கோரியும், கோயிலை அறநிலையத்துறை முழுமையாக கைப்பற்ற வலி்யுறுத்தி சிதம்பரத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 115 பேரை நகர போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சிதம்பரம் காந்திசிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் நடராஜர் கோயில் தெற்குவாயிலை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது நகர போலீஸார் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் அவர்களை வழிமறித்து 3 பெண்கள் உள்ளிட்ட 115 பேரை கைது செய்தார்.
முற்றுகை போராட்டத்தில் பிரசாரச் செயலாளர் சிற்ப.ராஜன், புதுச்சேரி மாநிலத் தலைவர் வீரமோகன், கடலூர் மாவட்டச் செயலர் க.விஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் ம.இளங்கோ, புதுச்சேரி மாநிலச் செயலர் செ.சுரேஷ், நாகை மாவட்டத் தலைவர் பரசுராமன், நாகை மாவட்டச் செயலர் பெரியார்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் குமரன், கடலூர் நகரச் செயலாளர் கார்த்திகேயன், சிதம்பரம் நகரச் செயலாளர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.