Archive for 2013-12-22

Madhya Pradesh SHAME: Five gangrape and burn the private parts of a Dalit woman

Bhopal: The recent gangrape of a 45-year-old Dalit woman in Harda district by five persons who then burned her private parts highlights the level of atrocities and discrimination faced by the dalits in the state.

The incident that happened on Saturday night came to light after a 45-year-old woman lodged a complaint with the police on December 25.

The victim alleged that she had gone to file a complaint at the police station after the incident but was turned away by the police who refused to file the FIR saying that she was lying.

Four days after the incident, the victim told the doctors at the district hospital as to how the police had refused to act on her complaint. The doctors then informed the police who arrested one of the five accused.

Investigations revealed that the incident had taken place in Singhanpur village and one of the accused, Ram Baksh (60), has been arrested while the other accused are at large. Ramesh Piplodia, station in charge of the Rahatgaon police station said that the victim in her complaint accused five people of abducting and gang raping her on the night of December 21. He also added that she had made the complaint on December 25.

Piplodia disclosed that of the five accused, three are of 60 years of age and barring the arrested person, other four are her relatives.

Piplodia disclosed that the medical examination of the victim have confirmed burning of her private parts and her hips were also branded.

Dr Manjusha Parate, who is treating the victim at the district hospital said that during interaction, the victim had told her that after the incident on Saturday she had gone to the Rahatgaon police station but her complaint was not entertained. The victim added that she came to the hospital after the pain became unbearable.

Dr Parate alleged, ‘‘The police registered the case after we informed them about it. Police didn't entertain the complaint earlier as they kept saying she cooked up the tale.’’

However police sources refuted all charges against them saying that the victim, in the past had complained of molestation and it was registered. They added that if the police had registered her complaint in the past, there was absolutely no reason for them in refusing this time.

Friday, December 27, 2013

Man arrested for raping a nine-year-old dalit girl - TOI,Tiruchy

TRICHY: A 39-year-old man was arrested for allegedly raping a minor girl on the outskirts of Trichy in the late hours of Wednesday. Both of them have been admitted to Mahatma Gandhi Memorial Government Hospital (MGMGH) in Trichy for medical examination.

The Thuvarankurichi police arrested G Senthilkumar (39), a resident of Thenur near Marungapuri Taluk in Trichy district, for allegedly raping a nine-year-old dalit girl at her residence in a nearby village on Wednesday evening. The victim, who is living with her father and grandmother, was alone at home when the incident took place. The girl's mother had passed away a few years back. The Class IV student's father, who is an employee at a hotel in Kallupatti, was away at work when Senthilkumar came to her residence. Shockingly, the accused was also a labour in the same hotel. As the girl was unable to get rid of his hold, she raised alarm. A neighbour, who witnessed the incident, alerted public, who rescued the girl and captured the accused.

On receiving the information, the Thuvarankurichi police rushed to the spot and arrested Senthilkumar. They booked him under Section 376 of IPC r/w 4, 10 of Prevention of Children from Sexual Offences Act. Moreover, the accused was also booked under Section 3, 12 of SC/ST Prevention of Atrocities (POA) Act as the girl is a dalit.

Source :: The Times of India (Tiruchy)

தலித் பெண் புகார் மீதான போலீஸ் விசாரணை திருப்தியில்லை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

தருமபுரி மாவட்டம், வேப்பமரத்தூர் தலித் பெண் புகாரின் மீதான  போலீஸ் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.
பொம்மிடி அருகே வேப்பரமத்தூர் சேர்ந்தவர் தலித் பெண் சுதா. இவர் அதே பகுதியில் வசிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக வேப்பமரத்தூரைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினருக்கு சுதா குடும்பத்தினருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இது குறித்து டிச.5-ஆம் தேதி சுதா தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு புகார் மனு அளித்திருந்தார். இதன் மீது விசாரணை நடத்த வேண்டும் என ஆணையம் தருமபுரி மாவட்ட காவல்துறைக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், தலித் பெண் சுதா புகார் தொடர்பாக தருமபுரி மாவட்ட போலீஸார் நடத்திய விசாரணை மற்றும் மேற்கொண்ட நடவடிக்கையில் திருப்தியில்லை எனவும், இந்த புகார் தொடர்பாக முறையான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி ஆணையம், தருமபுரி மாவட்ட எஸ்பி ஆஸ்ராகர்க்கு கடிதம் அனுப்பியுள்ளது.

நன்றி :: தினமணி

தமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது - சமகல்வி இயக்கம்

தமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஒன்று.


மாநிலத்தின் பல பகுதிகளில், அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சட்டத்துக்கு புறம்பான வகையில் சில பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று சமகல்வி இயக்கம் எனும் தன்னார்வ அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைக் கண்டுவருவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது என்று அந்த அமைப்பினர் கூறுகின்றனர்.
தலித் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட இப்பள்ளிகளில் சிறப்பான கல்வியை அவர்களுக்கு வழங்கவில்லை என்பது மிகவும் வருத்தமும் வேதனையும் அளிக்கும் விஷயம் என்று இந்த ஆய்வை நடத்திய சமகல்வி அமைப்பின் செயலர் செல்வகுமார் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தின் ஆறு வட மாவட்டங்களிலுள்ள 90 பள்ளிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்வது, சுமார் ஒரு கிலோமீட்டர் வரை சென்று பள்ளிக்காக குடிநீர் கொண்டு வருவது, பள்ளியினருக்காக தேநீர் வாங்கி வருவது, பள்ளி வளாகத்தை துப்புரவு செய்வது போன்ற பல வேலைகளை மாணவர்கள் செய்யும்படி பணிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
பல பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கை தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் பார்வைக்கு அனுப்பப்படும் எனவும், தமிழக அரசின் அதிகாரிகளிடமும் கையளிக்கப்படும் எனவும் செல்வகுமார் கூறுகிறார்.
தமிழகத்தில் தலித் மக்களுக்காக செயல்படுவதாகக் கூறும் அரசியல் தலைவர்கள் இப்படியான விஷயங்களில் கவனம் செலுத்துவது இல்லை என்றும், அதைத் தாங்கள் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

நன்றி :: பிபிசி

This music season, an award for dalit mridangam maker

Selvam, A Christian, Gets Prize Named After Father

TIMES NEWS NETWORK 

        (Mridangam player T K Murthy (left) and musicologist B M Sundaram presented the award to F Selvam )

Chennai: The general perception that Carnatic music remains a preserve of Brahmins was, to an extent, dispelled on Wednesday when F Selvam, a dalit Christian and maker of mridangams, was conferred with the Fernandes Award For Excellence. 
    Incidentally, Selvam got the award named after his father Fernandes, who made mridangamsfor many a maestroof yesteryear,including PalghatMani Iyer. 
    The award was instituted by Parivadini, a virtual sabha formed in October. “We wanted to get into the root of Carnatic music andbasedon thesuggestion of Balaji, a mridangam player,wedecidedtohonour Selvam for his work and that of his father,” said aerospaceengineer T N Ramachandran, one of the twofoundersof Parivadini. 
    Usually, awards are given to artists,butthis appearstobethe firsttime an awardhasbeen given to an instrument maker. “An awardto peoplelike Selvam will really make them proud and enthuse them,” said musicologist B M Sundaram, who presented thecash awardof 10,000. 
    Selvam, who lost his right hand in a bus accident in 1995, says he learnt the art in the house of mridangam great PalghatManiIyer in Thanjavur. “I learnt to tune the instrument based on the small paper bits left on more than 60 mridangams in Mani sir’s house. The bits had details of the sruthi and other technicalities. After my father’s death, I started tuning the instruments for Mani sir and others,” he told TOI. Overjoyed on receiving the award on Christmas, he thanked ‘Velankanni Matha’ for hissuccess. 
    ‘Parlandu’, as Fernandes was called by people like Palghat Mani Iyer and Palani Subramaniam Pillai, was considered one of the reasons for their success. He was known to tune the mridangam according to the concert of the day. “We would 
only need to tell the name of the vocalist or instrumentalist who was going to perform and the mridangam would be set exactly as needed by Parlandu,” said mridangam maestro T K Murthy, who presented a citation to Selvam and thanked the family for having made him what he was. 
    Palghat Mani Iyer’s son M Rajaraman said his father had so much faith in ‘Parlandu’ that on one occasion he gave him a sovereign for tuning the instrument to perfection. “They used to fight often but rejoin almost immediately,” hesaid. 

Virtual sabha a hit among music fans Chennai: Parivadhini, a ‘virtual sabha,’ does not have a hall or big parapernalia but uploads concerts on YouTube and organises concerts. It was formed by Bangalore-based aerospace engineer T N Ramachandran and his friend S Venkataraghavan in October. “Both of us are music lovers and don’t have a music background. We wanted to encourage many unknown artists. The idea is to upload live the concerts of the likes of Injikudi Subramanian (nadaswaram) during the season for thousands to watch,” said Ramachandran. 
    Named after an old veena mentioned in the scriptures, the portal has become a hit with music lovers across the world. “So far we have around 2.5 lakh views of the concerts and many viewers are from India, the US, Dubai and Australia. We are yet to get into the economics of managing the virtual sabha but in due course we will do it,” said Venkataraghavan. TNN
Wednesday, December 25, 2013

2013 - A Year of Tension for Dharmapuri - Indian Express



For Clear Image Click HERE

Tuesday, December 24, 2013

நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்



நிலம் இல்லாதவனுக்கு நிலம் வாங்கி தரனும் என்ற எண்ணம் பேய் புடிச்ச மாதிரி மனசுக்குள்ள. வீடு, காடு இதை தவிர வேற எண்ணம் எதுவுமே இல்லை.

நாகபட்டினத்தில் நிலசுவந்தார் ஒருவர் சபதம் போட்டார். ஒரே நாளில் ரெஜிஸ்டர் பண்ணுவதாக இருந்தால் உடனடியாக கேட்ட நிலத்தை தரே
ன் என்றார். முழு பணத்தையும் தர வேண்டும் என்றார். என்னிடம் பணம் கிடையாது. நம்பிக்கை மட்டும், துணிவு மட்டும், நான் பிராத்திக்கின்ற வள்ளலாரின் பக்தி மட்டும் துணையாக...உடனடியாக சரி என்றான்.

அவரிடம் 1,040 எக்கர் நிலம் இருந்தது. அதை வாங்க வேண்டும். தாட்கோ நிதி மட்டும் கிடைத்தால் போதும், வருவாய் துறையில் தலித்துகளுக்கு பத்திரபதிவு செய்வதற்கு உள்ள கழிவுத் தொகை இருப்பதால் வேறு செலவு கிடையாது.

கலெக்டர் ஜவஹரிடம் சென்றேன் . 1,040 ஏக்கர் நிலம் ரெடியாக இருக்கிறது, நிலசுன்வந்தர் குறைந்த விலைக்கு கொடுக்க முன்வந்துள்ளார். அனால் நிலசுவந்தார் ஒரே நாளில் ரெஜிஸ்டர் பண்ண வேண்டும் என்கிறார் என்றேன். உங்கள் உதவி கிடைத்தால் ஏழை மக்களுக்கு வீடு கிடைக்கும் என்றேன்.பயனாளிகள் தயாராக உள்ளனர் என்றேன்.

கலெக்டர் உடனடியாக ஒரு ஆர்டர் போட்டார் . எல்லா VAO, தாசில்தார் மற்ற அதிகாரிகளைவரச் சொன்னார். அடுத்த நாள் காலை எல்லோரும்வந்துவிட்டனர் .நானும் பயனளிகளுடன் வர,உடனடியாக ரேஜிஸ்டரேசன் துவங்கியது.கலை 10 மணி ஆரம்பித்தது அடுத்த நாள் கலை 3 மணிக்குத்தான் முடிந்தது. கலெக்டர் கூடவே இருந்தார்.அவரை ஓய்வு எடுக்கசொன்னபோது சிரித்துவிட்டு என்னுடனே இருந்தார். எல்லா பயனளிகளுகும் நிலப்பத்திரம் ரெடி ஆனது.

அடுத்த நாள் மெட்ராஸ்ல் வருவாய் துறை அதிகாரியைச் சந்தித்து பத்திர பதிவு தொகையில் கழிவு இருப்பதைச் சொல்லி, பதிவிற்கு அனுமதி கேட்டேன். அதிர்ந்துபோனார். "அரசாங்கத்திற்கு இது பெரிய நஷ்டம்"என்றார். மேலும் இதுபற்றி விவதிதுவிட்டு சொல்வதாக சொன்னார்.

ஒரு வேலை ஆரம்பித்தால்எனக்கு அதை உடனடியாக முடித்தாக வேண்டும். பஸ் பிடித்து முதலமைச்சர் கலைஞர் வீட்டுக்குப் போனேன்.செக்யூரிட்டி போலீஸ் என்னை விசாரித்துவிட்டு நான் ஏன் தனியாக வந்தேன் என்று
கேட்டனர். "நீங்கள் எல்லாம்என்னுடைய நண்பர்கள் தான் என்றான்." சிரித்துவிட்டு என்னை கலைஞரை சந்திக்க அனுப்பினர். விவரத்தை சொன்னவுடன் கலைஞர் யோசிக்கவில்லை. வருவாய் துறை அதிகாரிக்கு உத்தரவு போட்டார். என்னை திருப்பி அனுப்பிய வருவாய் அதிகாரி வரவேற்றார். எல்லா பத்திரங்களுக்கும் கழிவு உறுதி ஆனது. 

அடுத்ததாக தாட்கோ அலுவலகம் சென்றேன். நிலையை விலக்கி மிக அவசரமாக நிதி வேண்டும் என்றேன். தாட்கோ அதிகாரிகள் நிலைமை உணர்ந்து சீக்கிரமாக நிதி கொடுத்தனர். மிகுந்த சந்தோசத்துடன் நாகப்பட்டினம் வந்தேன். தாட்கோ நிதி மற்றும் வருவாய்த் துறை பதிவு தொகை கழிவு என எல்லாம் கை கூடியது. சொன்னபடி நிலசுவந்தரிடம் பணத்தை கொடுத்து 1,040 பத்திரங்களும் ஒரே நாளில் பதிவாகியது. - கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்


நன்றி :: Pramila Krishnan 

வெண்மணி பற்றிச் சொல்லுங்க

        1968 டிசம்பர் 25 ராத்திரி,------எனக்கு தூக்கம் வரல, காந்திகிராமத்துல எங்க வீட்டுக்காரர் ஒரு சின்ன ஆசிரமம் கட்டி இருந்தார், நாங்க அங்க இருந்தோம், காலையில செய்திய பேப்பர்ல பாத்துட்டு குன்றக்குடி அடிகளார்ட்ட ஓடினேன், அவர்கிட்ட சொல்லிட்டு , 26 காலை 4 மணிக்கு வெண்மனி போய் சேர்ந்துட்டேன், போயி முதல்ல பார்த்தது ஒரு குழந்தைய வீசி எரிஞ்சிருக்காங்க அது தென்னமரத்துல மோதி இறந்து கிடந்தது, தென்னமரத்த சுத்தி ரெத்தம் கிடந்தது, இனிமே இந்த இடத்த விட்டு போகக் கூடாதுன்னு  முடிவு பண்ணிட்டேன் --- ஆல் இண்டியா சர்வோதய சங்க தலைவரா இருந்தேன், கம்யூனிஸ்டுகள் உள்ளிருந்து மக்களுக்கு உதவி செஞ்சிகிட்டு இருந்தாங்க, என்னக் கண்டா ஆகாது, வந்துட்டா காங்கிரஸ்காரின்னு திட்டுவாங்க, இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணும்கற தீர்மானத்துல எல்லாத்தையும் பொறுத்துகிட்டு இருந்தேன். கொஞ்ச கொஞ்சமா அங்கிருந்த பெண்களோட பழக ஆரம்பிச்சேன், 5 மணிக்கே ஆண்டை வீட்டுக்குப் போயி வேல செஞ்சிட்டு பழைய சோறு வாங்கிகிட்டு வருங்க, அதுல கொஞ்சம் தைரியமான பெண்கள தேர்வு செஞ்சி அவங்ககிட்ட பேசுவேன், அவங்க தர்ற ஐந்து ரூபாய்க்கு பதிலா முப்பது ரூபாய் தர்றேன் அவங்க வீட்டுக்கு வேலைக்கு போகாதிங்க அப்படின்னு சொல்வேன், அப்புறம் அவங்க பிள்ளைங்கள வெளியில கூட்டிட்டு போயி மரத்தடியில வச்சு பாடம் சொல்லி கொடுக்கிறது, தலைவர்கள் என்ற பேர்ல சிலர் வருவாங்க உடனே  அங்கிருக்கிற பெண்கள் என்ன ஒளிஞ்சுக்க சொல்வாங்க. நானும் ஒளிஞ்சுக்குவேன், சீர்காழி ரவி என்பவர் தான் எங்களுக்கு காசு பணம் உதவி செய்தார்.
வெண்மணி சம்பவத்தின் போது அண்ணா முதலமைச்சராக இருந்து என்ன நடவடிக்கை எடுத்தார்?

அரஸ்ட் பண்ணினாங்க , ஆனா அரசு ஒண்ணும் செய்யல , அந்த ஊர் மக்களே ஆந்திராவிலிருந்து நக்சலைட்டுகளை அழைச்சிட்டு வந்து கோபால கிருஷ்ணன 16 துண்டா வெட்டிப் போட்டுட்டாங்கன்னு போலீஸ் சொன்னாங்க, கோர்ட்ல ப்ருவ் பண்ண முடியல.

அரசாங்கத்தில் இருந்து ஏதாவது உதவிகள் செய்தார்களா?

 நான் தான் முதலில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்தேன், 3 ஏக்கர் இருந்தா தான் வீடு கட்ட முடியும் , நிலம் வாங்குறது ஈசியான வேலையில்லை, குறைந்தது 5 மாதமாவது போராடித்தான் வாங்கணும், நாகப்பட்டினம் தமயந்தி நாடார் பள்ளி சொந்தக்காரர் கிட்ட போராடி நிலத்தை வாங்கி அடுத்த நாளே எல்லோரையும் அழச்சி அவங்க பேர்ல ரிஜிஸ்டர் பண்ணினேன், அங்கிருந்த தலைவர்கள் அரசு 2 ஏக்கர் கொடுக்குது நீ ஏன் 1 ஏக்கர வாங்குறன்னு மக்களை திசைதிருப்பி விட்டுட்டாங்க, 70,000 ரூபாய்க்கு நிலத்தை வாங்கிட்டு பொறுமையா இருந்தேன், மூணு வருஷத்துக்கு அப்புறம் தான் நிலத்தை அவங்க எடுத்துகிட்டாங்க, எவ்வளவோ கொடுமைகளைப் பொறுத்துக்கிட்டேன் ஆனா அவங்க பேசின கொச்ச வார்த்தைகளத்தான் இன்னும் பொறுத்துக்க முடியல. 
நான் பெண்களுக்குச் சொல்றது என்னன்னா, ‘ உங்களோட சக்திய நீங்க உணருங்க. உங்களால எதையும் சாதிக்க முடியும்’ .அதனால பெண்கள், கூட்டத்துக்கு வரும்போது கையில ஒரு விளக்கையும் கொண்டு வரச் சொல்வேன், வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற ஜோதிய அவங்களால உணர முடியும்னு நான் நம்பறேன்.  

நன்றி : மணற்கேணி  , ஆகஸ்டு - செப்டம்பர் 2011  

கத்தியின்றி ரத்தமின்றி..! (கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் சுதந்திரப் போராளிகளின் வீர வரலாறு)

.............................................................கருகிய உடல்களுக்கு முன்னால் இருந்த ஜெகந்நாதனுக்குக் கோபம் வந்தது. கம்யூனிஸ்டுகளின் அணுகு முறைதான் இது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் என்று சாடினார். நான் கம்யூனிஸ்டுகள் இருப்பதால்தான் நிலைமை இவ்வளவாவது கட்டுக்குள் இருக்கிறது என்று சமாதானப்படுத்தினேன்.

கீழ்வெண்மணியில் கிருஷ்ணம்மாள் ஒரு வருட காலம் தங்கினார். கம்யூனிஸ்டுகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையில் அவர் தலித்துகளிடையே பணியாற்றினார். 1971ஆம் வருடம் அந்தக் கிராமத்தில் இருந்த 74 தலித் குடும்பங்களுக்கு 74 ஏக்கர் நிலங்களை - நல்ல விளைச்சல் விளையக் கூடிய நிலங்களை - வாங்கிக் கொடுத்தார். 1968 போராட்டத்தின் காரணம் விவசாயிகள் அரைப் படி அரிசி கூடுதல் கூலி கேட்டது என்பதை நாம் நினைவுவைத்துக்கொண்டால் இந்தச் சாதனை எவ்வளவு பிரம்மாண்டமானது என்பது நமக்கு விளங்கும்.

கீழ்வெண்மணி விவசாயிகள் இன்று சொல்கிறார்கள்:

"கிருஷ்ணம்மாளும் ஜெகந்நாதனும் எங்களுக்குச் சிவனும் பார்வதியும் போல. அரைப் படி அரிசி கூடுதலாகக் கேட்ட எங்களுக்கு அந்த நிலமே கிடைத்துவிட்டது... பொருளாதார நிலையில் நாங்கள் உயர்ந்தது என்பது எங்கள் சமூக நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது


நன்றி :: காலச்சுவடு

கீழவெண்மணி கோபாலகிருஷ்ணனை கொலை செய்தது யார்?

கீழவெண்மணி கோபாலகிருஷ்ணனை கொலை செய்தது யார்? திராவிடர் கழகத்தினர் என்ற பேச்சும் இருக்கிறதே?

இல்லை. எம்.எல்.கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதைச் செய்தவர்கள். அவர்கள் ஒரு காலத்தில் திராவிடக் கட்சிகளில் இருந்தவர்களாக இருக்கலாம். கீழத்தஞ்சையில் இருந்து நாகை செல்லும் சாலையில் ஒருபக்கம் இருப்பவர்கள் கம்யூனிஸ்டு கட்சிகளாகவும், எதிர்பக்கம் இருப்பவர்கள் திராவிடர் கழகத்தினராகவும்தான் பெரும்பாலும் இருப்பார்கள். இரண்டு அமைப்புகளுக்குமே அங்கு பெயர் பறையன் கட்சி என்பது தான்.

திராவிடர் கழகத்தினரும் இதே போன்று அழித்தொழிப்பு வேலைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். திராவிட விவசாயத் தொழிலாளர் அமைப்பும் அந்த நேரத்தில் உதயமானது. அப்போது நாகைக்கு வந்த பெரியாரிடம் இதைப் பற்றி செய்தி சொல்லப்பட்டது. அதற்கு அவர் இதுபோன்ற காலித்தனங்களை நான் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதனால் திராவிடர் கழகத்தில் இருந்து பல தோழர்கள் வெளியேறி எம்.எல்.கட்சியில் இணைந்தார்கள். தோழர் ஏ.ஜி.கேவும் 67 வரை திராவிடக் கட்சியில் இருந்தவர் தான்

- தோழர் தியாகு நன்றி :: கீற்று

கீழ்வெண்மணி படுகொலைக்குக் காரணமான கோபாலகிருஷ்ணநாயுடுவை வெட்டிக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற 13 பேரில் 12 பேர் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள்





புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'அக்னி பரீட்சை' நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் நேர்காணல்

கீழவெண்மணி நிகழ்வும் பதிவும் - ப. இரமேஷ்

மக்களாட்சித் தத்துவத்தை முதன்மையாகக் கொண்ட நாடாக விளங்குகின்ற இந்திய நாட்டில் இன்று, மனிதநேயப் பண்புகள் கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்களிடமிருந்து நீங்கப்பெற்று, மனித மனங்கள் இன்று வெறுமையாகக் காட்சியளிக்கின்றன என்று கூறலாம். மக்களாட்சிப் போக்குக்கு எதிராக மனிதநேயப் படுகொலைகள் வர்க்கப் போராட்டங்களின் வழியாக ஊடுருவி இச்சமுதாயத்தை அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளன என்பதை, கீழவெண்மணி நிகழ்வு உணர்த்துகின்றது.

கீழவெண்மணியும் அன்றையப்போக்கும்

முந்தைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும் தற்போதைய நாகை மாவட்டத்திலும் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் கீழவெண்மணி ஆகும். இக்கிராம் திருவாரூரில் இருந்து இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1968 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வின் காரணமாக உலக மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்த கிராமமாக இது விளங்குகிறது. இக்கிராமத்தில் குடியானவர்களும், தாழ்த்தப்பட்டவர்களுமாகிய இரண்டு சாதினரும் தனித்தனித் தெருக்களில் தம் வசிப்பிடங்களைக் கொண்டுள்ளனர். இன்றும் அந்த நிலைக் காணப்படுகிறது. வெண்மணியைப் பற்றி, சோலை சுந்தரபெருமாள் தம் நூலில்,

தேவூருக்குத் தெக்கால கீழவெண்மணி நஞ்சையும் புஞ்சையும் முப்பது வேலி மாவட மரவடையோட மவுந்து போயிருக்கிற ஊரு1

என்று குறிப்பிடுகிறார்.

வெண்மணி கிராமத்தில் உள்ள தெருக்களைப் பற்றிக் கூறும்பொழுது.

தெருன்னா அப்படியே ஒழுங்காவா இருக்கு? குடிசைக திக்காலுக்கு திக்கா ஒன்னப் பாத்துக்கிட்டு நிக்குது. தெருவும் சந்தும் பொந்துமா அதுக்கு எடையில நாலஞ்சி புளியமரமும் இருக்கு

என்று தெருக்களின் அமைப்பைக் கிராம மக்களே எடுத்துக் கூறுவதுபோல் நயமாகக் கூறியுள்ளார். இதன் மூலம் கீழவெண்மணி கிராமத்தின் அமைவிடத் தன்மைய அறிந்துகொள்ள முடியும்.

ஏழையென்றும் அடிமையென்றும்

எவனுமில்லை ஜாதியில்

இழிவு கொண்ட மனிதர் என்பர்

இந்தியாவில் இல்லையே

என்ற மகாகவி பாரதி பாடினார். ஆனால், அதற்கு நேர்மாறான சமூக அமைப்பையே இன்றும் நம்மால் காணமுடிகிறது. கீழவெண்மணியிலும் நிலபிரபுக்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்ததற்கான சான்றுகள் மிகுதியாக உண்டு. பண்ணையாட்களை அடிமைகளாக நடத்தினர். அவர்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டு, கொடுக்கின்ற கஞ்சியையோ கூழையோ குடித்து வாழ்க்கை நடத்தினர். அன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் பண்ணையடிமை முறை எப்படி இருந்தது என்பதை அருணனின் பின்வரும் கூற்று உணர்த்தும்,

அன்று தஞ்சைத் தரணியில் பண்ணையாள் முறை என்பது இயல்பான மனித வாழ்வு போல நடைமுறையில் இருந்தது. இந்த முறையின்படி ஒரு குடும்பம் முழுமையும் பரம்பரைப் பரம்பரையாக ஒரே நிலப்பிரபுவிடம் வேலைபார்க்கும். குடும்பத்தின் ஆண்மகன் வயல் வேலை பார்ப்பார். அவரது மனையாள் மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளுவர். இவர்களின் ஆண் பிள்ளைகள் மாடுமேய்க்கும் பெண் பிள்ளைகள் புல் அறுத்து வரும். அவர்களுக்கென்று சொந்த வாழ்வு சொந்த எதிர்காலம் ஏதுமில்லை. அவர்கள் அறிந்ததெல்லாம் அவர்களது ஆண்டையே. அவர்கள் கண்ட உலகமெல்லாம் ஆண்டை காட்டியதே. அவர்கள் அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விட்டதெல்லாம் ஆண்டையின் குடும்பமே. அங்கே தொடங்கி அங்கேயே முடிந்து விடுவது அவர்களது வாழ்வு மட்டுமல்ல, அவர்களது சாதியினரின் வாழ்வும்கூட கிட்டத்தட்ட அடிமைநிலை. சொல்லி வைத்தாற்போல அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்கள்

என்னும் இக்கூற்றுக்கு கீழவெண்மணி சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.

அப்படிக் கூறுவதால், கீழவெண்மணியில் மட்டும் பண்ணையாள் அடிமை முறை இருந்ததாகக் கருத முடியாது. அக்காலக் கட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் இந்தப் பண்ணையாள் அடிமை முறை இருந்துள்ளது. அதை இன்றும் பல கிராமங்களில் காணமுடியும்.

கீழவெண்மணி பிரச்னைக்கான காரணங்கள்

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினைகள் உண்டு என்ற அடிப்படையில் சமூகத்தில் ஏதாவது ஒரு விதத்தில் போராட்டங்களும் பிரச்சினைகளும் வெடிக்கின்றன. கீழவெண்மணியில் 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி, தாழ்த்தப்பட்ட மக்கள் 44 பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர். இந்த நிகழ்வின் பின்னணி குறித்து அறிய வேண்டியுள்ளது.

பண்ணையாட்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வினால், பண்ணையாள் அடிமை முறை என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியவுடன், அம் மாற்றத்தையும் வளர்ச்சியையும்கண்டு நிலப்பிரபுக்கள் அஞ்சத் துவங்கினர். இதனால் அவர்களுக்கு மனிதநேயமற்ற முறையில் பல கொடுமைகளைச் செய்தனர். தங்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி நிற்க வேண்டும் என்ற நிலப்பிரபுக்கள் விரும்பினர். இக்காலக் கட்டத்தில்தான் கீழ்வெண்மணியில் கூலி உயர்வுக் கேட்டுப் போராடினர், இந்தப் பிரச்சினை வர்க்கப் போராட்டமாக உருவெடுத்தது.

கூலி உயர்வும் விளைச்சலில் பங்கும்

தொழிலாளி வர்க்கம் பொருளாதார அடிப்படையில் தங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்பின. அதனால் இதற்குமுன் ஆண்டாண்டு காலமாக வழங்கப்பட்ட கூலியை விட கூடுதலான கூலியும் விளைச்சலில் பங்கும் கேட்டுப் போராடியது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்து, வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து வேலை செய்ய வைத்தனர். நிலப்பிரபுக்கள் மனிதநேயம் இல்லாமல் அவர்களைப் பழிவாங்கியதை எந்த விதத்திலும் நியாயமாகக் கருத முடியாது. இதனால் விவசாயிகள் ஒன்றுபட்ட விவசாயிகள் இயக்கத்தையும் நிலவுடைமையாளர்கள் நெல் உற்பத்தியாளர் சங்கத்தையும் தோற்றுவித்தனர்.

விவசாயிகள் இயக்கத்தின் கோரிக்கைகள் இயல்பாகவே விளைச்சலில் கூடுதல் பங்கு. கூடுதல் கூலி, என்பதான பொருளாதாரக் கோரிக்கைகளாக இருந்தபோதிலும் அது பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த பண்ணை அடிமைத்தனம் என்னும் கோடூரச் சமூக அமைப்பின் அடித்தளத்தை அசைப்பதாக இருந்தது

என்று அருணன் குறிப்பிடுகிறார். இதன் மூலம் விவசாயிகள் இயக்கத்தின் நோக்கம் புலனாகிறது.

கீழவெண்மணி நிகழ்வை முன்வைத்து எழுந்த பதிவுகள்

சமுதாய நிகழ்வுகளை உற்று நோக்கி அதன் தாக்கத்தாலும் அனுபவத்தாலும் ஏற்படுகின்ற உணர்வுகளைச் சமூக அக்கறையோடு அவற்றுக்கு ஏதாவது ஒரு வடிவம் கொடுத்து மக்களுக்கு வெளிப்படுத்துகின்ற பணியைச் செய்து வருகின்றனர் இலக்கியவாதிகள். கீழவெண்மணியில் நடந்த படுகொலையின் பாதிப்பால் எழுத்தாளர்களும் கவிஞர்களும் அன்றைய காலகட்டங்களில் தங்களது எண்ணங்களைக் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், கதைகளாகவும், நாவல்களாகவும் வெளிப்படுத்தினர். அக்காலத்தில் எழுந்த பதிவுகளில் ஒருசில மட்டும் ஈண்டு ஆய்வின்பொருட்டு சீர்தூக்கிப் பார்க்கப்படுகின்றன.

கவிதைகள்

இருபதாம் நூற்றாண்டில் மக்கள் மத்தியில் புதுக்கவிதைகளுக்கு ஒரு முக்கியத்தும் அளிக்கப்ட்டுள்ளது. மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வையும் விடுதலை வேட்கையையும் ஏற்படுத்தி நாடு விடுதலை பெறுவதற்கான இலக்கிய ரீதியிலான பங்களிப்புகளில் புதுக்கவிதைக்கும் ஓர் இடம் இருந்துள்ளது. கவிஞனின் மனத்தில் தோன்றுகின்ற உணர்ச்சிகள்தான் கவிதைகளாக வெளிப்படுகின்றன. கவிதையைப் பற்றித் தேசிய விநாயகம் பிள்ளை குறிப்பிடும்பொழுது

நினைத்தவுடன் வருவது கவிதையல்ல

நெஞ்சு கனத்தவுடன் வருவது கவிதை

என்று குறிப்பிடுகிறார். அதுபோல கீழவெண்மணி நிகழ்வு கண்டு நெஞ்சம் கனத்துப்போய் கவிஞர்கள் பலரிடமிருந்து அது பற்றிய பல கவிதைகள் எழுந்தன. அவை வருமாறு.

வெ.நா. மூர்த்தி

மார்க்சிய சிந்தனையுடைய கவிஞர் வெ.நா.மூர்த்தி கீழவெண்மணி நிகழ்வின் பாதிப்பால் “வெண்மணிக் கொடுமை” என்ற தலைப்பில் இவ்வன்செயலை,

வரலாறு காணா ஒரு சோகக் காட்சி - வெண்

மணி தன்னில் நடந்தது பாரம்மா - அந்த

வன் கொடும் செயல்பற்றிக் கேளம்மா

என்று தொடங்கி

கொலை காரப் பண்ணையார்

தமை வேண்டிக் கூலி நெல்

கூட்டியே கேட்டதற்காகக்

கொடுமையிலும் கொடுமையம்மா

குடிசை எல்லாம் எரிந்ததம்மா

உடல் துள்ள உயிர் துள்ள

நாற்பத்து நால்வரை

உயிரோடு எரித்தார்கள் அம்மா

என்று பண்ணையாரின் அதிகாரப் போக்கைக் குறிப்பிட்டுச் சாடுகிறார். வெ.நா.மூர்த்தி. இறுதியாக அந்த நிகழ்வினைக் கண்டு இவ்வுலகமே கண்ணீர் வடித்தது என்றும், மேலும் நீதி என்ற ஒன்று இருந்திருந்தால் அது அன்றே இறந்திருக்கும். நேர்மை என்ற ஒன்று இருந்தால் அது அன்றே ஒழிந்திருக்கும் என்றும் உணர்ச்சிப் பொங்க

குண்டர்கள் செயல் கேட்டு

குவலயம் அழுத தம்மா

நீதியிருந்தால் இறந்திருக்கும்

நேர்மை இருந்தால் அன்றே

ஒழிந்திருக்கும்

என்று சாடுவதைக் காணமுடிகிறது.

நா. காமராசன்

கீழவெண்மணி நிகழ்வைப் பற்றித் கவிதைகளில்

கள்ளமனப் பணக்காரர் ஐந்து பேரும்

கண்மூடித் தூங்குகின்ற வீட்டை எல்லாம்

அள்ளியிட்டார் நெருப்பினிலே வெண்மணிக்கு

அவர் வைத்த நெருப்வரை எரித்த தென்றார்

என்று, ‘கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்' என்பதுபோல அந்த கொலைக்காரர்கள் வைத்த நெருப்பு அவர்களையே அழித்தது என்று தம் மனக் குமுறலை வெளிப்படுத்துகிறார் நா. காமராசன்.

இன்குலாப்

பல சமுதாயப் பிரச்சினைகளைத் தம் கவிதைகள் மூலமாக வெளிப்படுத்தும் இன்குலாப் கீழவெண்மணி நிகழ்வைப் பற்றி,

வெண்மணித் தீப்பந்தம் - உலா வரும்

வீதியிலே எரிகிறது

கண்மணிக் குழந்தைகளோ தோரணைக்

கொடியாய்த் தெரிகிறது

என்று கீழவெண்மணிக் குடிசைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது பற்றியும் அதில் குழந்தைகளும் உயிரோடு எரிக்கப்பட்டனர் என்பதையும் மனவேதனையுடன் வெளிப்படுத்துகிறார்.

கீழவெண்மணியில் இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு போராடினால் வெற்றி பெறமுடியும் என்பதை,

வெண்மணியில் வெந்துவிட்ட கண்மணிக் குழந்தைகளே

வெல்லும் நாள் வெகுதொலைவில்லையே - உம்மை

வென்றுவிட்டதாய் மகிழும் பண்ணை முதலாளிகளைக்

கொன்றொழிக்கும் நாள் வெகுதொலைவில்லையே

என்றும் இன்குலாப் குறிப்பிடுகிறார்.

தணிகைச் செல்வன்

கீழவெண்மணியில் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதிக் கிடைக்கவில்லை என்பதைத்தணிகைச் செல்வன்,

வெண்மணியில் மாமிசங்கள் கருகியவாடை - வீசி

விலகுமுன்னே கண்டதென்ன நீதியின் பாதை?

வெண்மணியின் தீயில் செத்தான் நீதிதேவனும் - . எங்கள்

வேதனையில் வளருகிறான் ஜாதி தேவனும்

என்று இச்சமூகத்தின் கண்மூடித்தனமானப் போக்கைச் சாடுகிறார்.

பழனிபாரதி

கீழவெண்மணி மற்றும் விழுப்புரத்தில் நடந்த சாதிக் கொடுமைகளைப் பற்றி ‘நெருப்புப் பார்வைகள்' என்ற நூலில்,

வெண்மணி, விழுப்புர

வழக்குகளில் நீங்களும்

சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்

என்று தீக்குச்சியைக் குறிப்பிடுகிறார் பழனிபாரதி. இதன் மூலம் வெண்மணி நிகழ்வைப் பற்றிய அவரது உணர்வு புலனாகிறது.

பாப்ரியா

இவரும் கீழவெண்மணி மற்றும் 1978ஆம் ஆண்டு விழுப்புரத்தில் ஏற்பட்ட மோதலில் தாழ்த்தப்பட்டோர் மேல்சாதியினரால் தாக்கப்பட்ட நிகழ்வைப் பற்றி,

அன்று

வெண்மணியில் வெந்த

சடலங்களுக்கு

விழிகளால் விளக்கேற்றி

வேதனையுடன் விழித்திருந்தோம்

இன்று

விழுப்புரம் மீண்டும்

வெண்மணியானது

விழுந்த கரிப்புகையால்

தீய்ந்தது

என்று பாப்ரியா குறிப்பிடுகிறார். மேலும், கீழவெண்மணிப் படுகொலையில் பெண்கள் அதிகம் இறந்தார்கள் என்பதை,

நீங்கள் அடுப்பங்கரையில் நின்று

அரிசியை வேக வைப்பீர்கள்

பருப்பை வேக வைப்பீர்கள்

உங்களையே வேக வைப்பதும் உண்டு

ஆம்

வெண்மணியில் வெந்ததில்

பெண்மணிகளே அதிகம்

என்று தமது கவிதைகளில் எடுத்துரைக்கிறார்.

கா. கார்க்கி

கீழவெண்மணி வெங்கொடுமையைப் பற்றிக் கூறும் கார்க்கி,

வெண்மணியில் எரிந்தவர்கள்

மீண்டும் வருகிறோம்

வெங்கொடுமைத் தீயை நெஞ்சில்

ஏந்தி வருகிறோம்

என்று கீழவெண்மணியில் மனிதர்கள் கொளுத்தப்பட்ட அவலத்தைச் சாடுகிறார். இவை போன்று கவிஞர்கள் பலர் அன்றைய காலக்கட்டத்தில் தங்கள் மனத்தில் தோன்றிய உணர்வுகளைக் கவிதைகளாகப் பதிவு செய்தனர்.

நன்றி :: திண்ணை

மனுசங்கடா ! நாங்க மனுசங்கடா !! கரு.அழ.குணசேகரன் அவர்களின் பாடல் தொகுப்பு




மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா
உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்த்தில தர்ம அடிய வாங்கி கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்
குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது
சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்க போனீங்க — டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
- இன்குலா

எழுத்தும் இலக்கியமும் - புலியூர் முருகேசன்

எழுத்தும் இலக்கியமும்
புலியூர் முருகேசன்

இங்கே எதுவும் பொதுவாக இல்லை. இலக்கியமும் தான். பொதுவானதாக இருக்க முடியாது. ஒவ்வொரு படைப்பும் ஒரு சாராரின் நலன் சார்ந்தே பின்னப்பட்டிருக்கும். எனவே, அது பிறிதொரு சாராருக்கு எதிரானதாக இருக்கும். பன்முகத்தன்மை கொண்ட மனிதர்கள் நிரம்பிய, சாதிய இழிபழிகள் கொட்டிக்கிடக்கிற, மதச் சகதி வழிந்தோடுகிற, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கொந்தளிப்பாய்த் தெரிகிற நம் இந்திய, தமிழகச் சூழலில்-இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும், பொதுவான எவ்வித அடையாளம் பின்புலமும் அற்றவர்களாக, நுட்பமானவர்களாகச் சித்தரிப்பது ஆபத்து. இது பொய்யுரைப்பது.

ஏனெனில், எழுதும் எவனும் தன் வர்க்கம் சார்ந்தே இயங்க இயலும். எழுத்தின், மொழியின் நடையிலும், இலக்கியத்தனத்திலும் அந்தந்த வர்க்கச் சாயலே பெருமையுடன் பளிச்சிடும். 1968-டிசம்பர் 25ல் தஞ்சைமாவட்டம் கீழவெண்மணி பண்ணை ஆதிக்கப் பயங்கரவாதியாம் கோபால கிருஷ்ண நாயுடுவால் 44 உயிர்கள் எரித்துக் கொள்ளப்பட்டன. அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டுப் போராடிய அந்த உழைக்கும் மக்களை எரித்துக் கொன்ற பண்ணை ஆதிக்கப் பயங்கரத்தைப் பற்றி அன்றைய தமிழக ‘இலக்கிய நுட்பம் தெரிந்த இலக்கியவாதிகள்’ எவரும் ஒரு மயிரைக்கூட எழுத்தில் பிடுங்கிப்போடவில்லை.

லா.ச.ரா சௌந்தர்ய உபாசகராகவும், தி.ஜானகிராமன் மோகமுள்ளில் தைத்துக் கொண்டும் இருந்தார்கள், மற்றும் அசோகமித்திரன், ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி எல்லோரும் அவரவருடைய பூணூலைத் தடவிக்கொண்டிருந்தார்களே தவிர வேறு எதுவும் அவர்களுக்குள் நிகழவில்லை. மொத்தத்தில் தமிழகத்தின் அன்றைய ‘இலக்கிய’ நுட்பம் தெரிந்தவர்களுக்குப் பண்ணை ஆதிக்கப் பயங்கரவாதத்தினால் எரிக்கப்பட்ட உயிர்களின் வலி தெரியவில்லை. அதனினும் கொடுமை ‘குருதிப்புனல்’ என்ற நாவலை நடந்த கொடுமைக்கு எதிராக ‘இந்திரா பார்த்தசாரதி’ எழுதி அதற்கு ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது.

ஆனால், சோலை சுந்தரப் பெருமாள், என்ற ‘இலக்கிய நுட்பம் தெரியாத’ எழுத்தாளர் எழுதிய ‘செந்தெல்’ என்கிற நாவல் எரிக்கப்பட்ட மக்களின் வேதனையை அந்த மக்களின் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறது. விமர்சிக்கப்பட்ட மக்களின் வேதனையை அந்த மக்களின் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறது. (இவர் எழுதியிருப்பதில் ஒன்று கூட கவிதை இல்லை’ என்று ஜெயமோகனால் ‘இலக்கிய நுட்பத்துடன்’ விமர்சிக்கப்பட்டது) இன்குலாப்பின் பாடலும், கவிதையும் 44 உயிர்கள் எரிக்கப்பட்டதற்கெதிராகப் புலம்பி கோபத்தை காட்டுகிறது.

தாயின் கருணை என பொன்னி புனல் பாய்ந்தும்
தீயை அணைக்காத கொடுமை
தாயைக் குழந்தைகளைத் தீயின் கரங்களுக்குத்
தின்னக் கொடுத்து வைத்த கொடுமை

ஓயாக் கடலலை ஓய்வை விரும்பினும்
ஓயாதலைக்கழிக்கும் நினைவாய்
மாயாச் சினமிது மடியாத் துயரிது
வரலாறு காணாத கொடுமை

சமீபத்தில் 2007 டிசம்பர் 25 வெண்மணி நாளில் வெளிவந்திருக்கும் பாட்டாளியின் ‘கீழைத்தீ’ நாவலில் 44 உயிர்கள் எரித்துக் கொல்லப்பட்டதன் பின் எதிர்வினையாக நிகழ்த்தப்பட்ட கோபாலகிருஷ்ண நாயுடுவின் அழித்தொழிப்புவரை மிக விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த உழைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் இத்தகைய வாழ்வு நுட்பம் பதிவுகளைல்லாம் தான் இலக்கியத் தன்மை கொண்டவை. தஞ்சைப் பூணூல் பண்ணையார்களின் குடும்பக் கதைகள் ஒதுக்கப்பட வேண்டியவையே.

ஏனெனில் லா.ச.ரா., தி.ஜா, அசோகமித்திரன், ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களின் எழுத்துக்களில் ‘தஞ்சைப் பூணூல் பண்ணையாரின்’ வர்க்கப்பாசம் பொங்கி வழிகிறது. இன்குலாப், சோலை சுந்தரப் பெருமாள், பாட்டாளி போன்றோரின் எழுத்துக்களில் ‘இணக்கம் காண முடியாத வர்க்கப் பகைமை’ கோபாவேசமாய்க் கொந்தளிக்கிறது.

இலக்கியம் நமக்குள் ஆழமாக அந்தரங்கமாக உரையாடும் ஓர் அழகியல் செயல்பாடு என்பது பொய்ப்பூச்சு. அரசு, மதம், சாதி பொருளியல் காரணங்களால் நொய்மைப்பட்ட மக்களின் வாழ்வைப் பேசுவதும், அவர்தம் கோபத்தை நேர்த்தியாக வழி நடத்தி ஒரு அழகிய சமூக மாற்றத்திற்கு அவர்களைத் தயார் செய்வதும்தான் இலக்கியத்தின், இலக்கியவாதியின் சாpயான செயல்பாடு. இதை ஏற்றுக் கொள்ளும் தன்மையற்றவர்கள் சமூக மாற்றத்திற்குத் தடையாக இருப்பவர்கள்.

நன்றி :: கீற்று 

கீழைத்தீ - புதினத்தில் மலர்ந்த புரட்சித்தீ

தோழர் பாட்டாளியின் எழுத்துளியால் செதுக்கப்பட்ட கீழைத்தீ புதினம் கம்பீரமான சிற்பமாக கருத்தை கவருகிறது. ஒரு புதினத்தில் இவ்வளவு கிளைக்கதைகளை, புரட்சிக்கருத்துக்களை, சந்தேகங்களுக்கு விடைகளை தரமுடியும் என்ற சாத்தியத்தை மெய்யாக்கியிருக்கிறார் தோழர். இப்புதினத்துக்கு பின்னால் இருக்கும் அவரது உழைப்பை, உழைப்பென்று சொல்லமுடியாது, தியாகம்.. தியாகத்தை தமிழர் யாவரும் கொண்டாட வேண்டியது அவசியம்.

புதினத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி எனக்கு புதியது. முதலிரண்டு அத்தியாயங்களை வாசிப்பதற்குள் திணறிவிட்டேன். அதன்பிறகு தஞ்சைத்தமிழ் நமக்கு பழகிவிடுகிறது. கீழ்வெண்மணி படுகொலைகளுக்கு பிறகான கீழ்த்தஞ்சையை களமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் பாட்டாளி.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருவதை அப்பாவி விவசாய கூலித்தொழிலாளி கொண்டாடுவதும், வீட்டு விசேஷத்துக்கு மைக் செட்டை கூட சவுண்டாக வைக்கமுடியாத சாதி அவலமும், தச்சுத் தொழிலின் நுட்பமும், சன்னாசித் தாத்தாவின் கதைகளும், பார்ப்பனீய அசிங்கமும், போலிச்சாமியார்களின் பொய் வேஷமும், இடையே சாதிமறுப்பு காதலும், பண்ணையார்களின் அடாவடியும், பாட்டாளிகளின் போராட்டமும், நக்சல்பாரிகளின் எழுச்சியும், அழித்தொழிப்பும், கம்யூனிஸவாதிகளின் சுயவிமர்சனமும்.. அப்பப்பா.. எவ்வளவு விஷயங்களை அனாயசமாக தொட்டுச்செல்கிறார் தோழர். புதினத்தை வாசித்துமுடித்ததுமே அறுபதுகளில் கீழத்தஞ்சையில் பள்ளராகவோ, பறையராகவோ பிறந்து நக்சல்பாரி இயக்கத்தில் நாம் இயங்கியிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் வருகிறது.

நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான கோபாலகிருஷ்ண நாயுடு அரைபடி நெல்லை கூலியாக உயர்த்திக் கேட்ட பாவத்துக்காக வெண்மணியில் 44 பேரை உயிரோடு கொளுத்தி, நீதிமன்றத்தில் சாட்சிகளை கலைத்து குற்றமற்றவர் என்ற தீர்ப்பை பணத்தால் வாங்குகிறார். நக்சல்பாரிகள் இயக்கம் கட்டமைத்து அந்த கொடுங்கோலனை அழித்தொழிப்பது தான் புதினத்தின் மையக்கரு.

கோபாலகிருஷ்ண நாயுடுவை சினிமா வில்லன் கணக்காக சித்தரிக்கிறார் தோழர். அவர் மீது வாசகனுக்கு வெறுப்பு ஏற்படவேண்டுமென்பதற்காக சில பக்கங்கள் வீணடிக்கப்பட்டதாக கருதுகிறேன். குறிப்பாக சவரத் தொழிலாளியை அழைத்து தனது அந்தரங்கப் பகுதியை சுத்தப்படுத்தச் சொல்வதும், பின்னர் அத்தொழிலாளியையே கைமைதுனம் செய்துதரச் சொல்வதையும், தன் பண்ணையில் வேலைபார்க்கும் கூலிப்பெண்களின் அங்கங்களை ஆபாசமாக அவன் வர்ணிப்பதையும் சொல்லலாம். இந்தளவுக்கு சித்தரித்தால் தான் அவன் மீது அறச்சீற்றம் வாசகனுக்கு எழும்பும் என்பதில்லை. கோபாலகிருஷ்ண நாயுடு என்ற பெயர் ஒன்றே போதும், கட்டற்ற வெறுப்பு வருவதற்கு.

வயதுக்கே வராத பெண் ஒருத்தியை கடத்தி கோபாலகிருஷ்ணநாயுடு பாலியல் வன்புணர்வு செய்வதாக சில காட்சிகள் வருகிறது. வெண்மணி சம்பவத்தை சித்தரித்து எழுதப்பட்ட குருதிப்புனல் என்ற புதினத்தில், கோபாலகிருஷ்ணநாயுடு ஆண்மையற்றவர் என்பதால் மனச்சிதைவு ஏற்பட்டு வெண்மணி கொலைகளை செய்தார், அது வர்க்கப் போராட்டமல்ல என்பதைப் போல எழுதியிருந்ததால், அதற்கு கவுண்டர் பாயிண்டாக கோபாலகிருஷ்ணநாயுடு ஒரு காமாந்தகன் என்பதாக பாட்டாளி சித்தரித்திருக்கலாம்.

பள்ளர் சாதியை சேர்ந்த ஜோதிக்கும், ஆச்சாரி சாதியை சேர்ந்த வெங்கிட்டுக்கும் மலரும் காதல் தீப்பிடித்து எரியும் மைதானத்துக்கு இடையே மலரும் ரோஜாப்பூ போல அழகும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கிறது. ஜோதியை பின் தொடர்ந்து ஆற்றங்கரைக்கு சென்று வெங்கிட்டு பேசுவது, திருவிழாவில் வளையலும், குஞ்சமும் வாங்கித்தந்து காதல்மொழி பேசுவதெல்லாம் செம அழகு. போலிச்சாமியாரின் முகமூடியை ஆசைத்தம்பி கிழித்தெறிவது, சன்னாசித் தாத்தாவின் ஈமக்கிரியைகளின் போது பார்ப்பனன் ஏமாற்றுவது எல்லாம் நகைச்சுவையோடு சொல்லப்பட்ட சமூக அவலங்கள்.

கோபாலகிருஷ்ணநாயுடுவை அழித்தொழித்த சிலகாலத்தில் நக்சல்பாரி இயக்கம் தனது வர்க்க எதிரி அழித்தொழிப்புப் பணிகளை இந்தியா முழுமைக்கும் நிறுத்திவிடுகிறது. எந்தச் சூழ்நிலையில் அந்த முடிவெடுக்கப்படுகிறது, ஏன் எடுக்கப்படுகிறது என்பது குறித்து விலாவரியாக இறுதியில் சொல்லப்படவில்லை. ஆனாலும் இதனால் நக்சல்பாரி இயக்கங்கள் குறித்த மேலதிகத் தகவல்களை வாசிக்க ஆர்வம் ஏற்படுகிறது. கம்யூனிஸ இயக்கங்களால் இந்தியாவில் ஏன் புரட்சியை ஏற்படுத்த இயலவில்லை என்பதை மிக எளியமொழியில் கதாபாத்திரங்களின் வசனங்கள் மூலமாக சொல்கிறார் பாட்டாளி.

தயவுதாட்சணியமில்லாத திராவிட மறுப்புத்தொனி நாவலில் பல இடங்களில் காணமுடிகிறது. வர்க்க எதிர்ப்பில் எப்படி தோழர்களின் பங்களிப்பை எவனும் மறுக்கமுடியாதோ, அதுபோல சமூகநீதிக்கான பங்களிப்பில் திராவிட இயக்கத்தாரின் பங்களிப்பையும் எவனும் மறுதலிக்கமுடியாது. வெங்கட்டு - ஜோதி கலப்புமணம் மூலமாக நக்சல்பாரிகள் சமூகநீதியையும் தொட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதாக பாட்டாளி சித்தரித்திருக்கிறார்.

இப்படியெல்லாம் சித்தரித்து தான் நக்சல்பாரிகளின் பங்களிப்பை சொல்லவேண்டுமென்பதில்லை, தோழர்களின் தியாகம் எப்போதும் மறக்கப்படாதது, மறைக்கமுடியாதது. ஆனால் கலப்புமணப்புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திய திராவிட இயக்கத்தாரின் பங்களிப்பையும் நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும். இவ்விஷயத்தில் திராவிட இயக்கத்தாரின் சிந்தனை மற்றும் செயலாக்கத்தை தோழர்கள் சொந்தம் கொண்டாடுவது தேவையில்லாத விஷயம். புதினத்தில் எனக்கு நெருடிய சில விஷயங்களில் இதுவும் ஒன்று.

நாவலை வாசித்து முடித்ததும் நாட்டின் இப்போதைய சூழல் நக்சல்பாரி பாணி புரட்சிக்கு நம்மை அழைத்துச் செல்கிறதோ என்ற எண்ணம் வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை கூட தன் குடிமக்களுக்கு ஒழுங்காக வழங்க வக்கில்லாத நிலையில், அமெரிக்காவுக்கு அடிவருடுவதையே தன் பிறப்பின் கடமையாக நினைப்பவர்கள் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்புக்கு கடந்த பதினேழு ஆண்டுகளாக வருவதும், அவர்களால் வெகுஜனமக்களின் வாழ்வாதாரம், கலாச்சாரம் பறிக்கப்படுவதையும் கண்டால் புரட்சி மலர்வதை யாராலும் தடுக்க இயலாது என்றே தோன்றுகிறது. அப்படி புரட்சி ஏற்படும் சூழலில் இயக்கப் பாகுபாடில்லாமல் பாட்டாளிகளோடு, படித்தவர்களும், அதிகாரத்தின் கீழ்மட்டத்தில் இருப்பவர்களும் இணைவார்கள் என்பதும் உறுதி.


நூல் : கீழைத்தீ

ஆசிரியர் : பாட்டாளி

வெளியீடு :
புதிய பயணம் வெளியீட்டகம்
எண், 6, 7வது வடக்கு சந்து,
சிம்மக்கல், மதுரை - 625 001.

விலை : ரூ.150/- (மக்கள் பதிப்பு)

நன்றி :: யுவகிருஷ்ணா 

நின்று கெடுத்த நீதி ( வெண்மணி வழக்கு: பதிவுகளும் தீர்ப்புகளும் )




மயிலைபாலு , அலைகள் வெளியீட்டகம்- 4/9, 4ஆவது முதன்மைச் சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600024 பக்: 448 விலை ரூ. 230 

டிசம்பர் 25 1968 அன்று நடந்த "கீழ்வெண்மணி படுகொலை" தொடர்பான நூல். இது வழக்கமான ஒரு நாவல் வடிவமல்ல. அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தீர்ப்புகள் மட்டுமே அடங்கிய ஒரு நூல். இது போன்ற கொடுமைகள் ஆங்காங்கே இன்னமும் நடந்து கொண்டுதான் உள்ளன. இது போன்ற விசயங்களை நம்மில் பலர் அறிந்திருக்க கூட வாய்ப்பில்லை. மீண்டும் இது போன்ற சமூகக் கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க கண்டிப்பாக இது போன்ற விசயங்களை அறிந்திருப்பது அவசியம். இதை பதிவு செய்த "அலைகள்" பதிப்பகத்தை பாராட்டியே தீர வேண்டும்.கடைசியாக, ஜாதிக் கொடுமை இல்லை என்று பாதிக்கப் பட்ட சமூகத்தின் வாயிலிருந்து எப்போது சொல்லக் கேட்கிறோமோ அப்போதுதான் ஜாதிக் கொடுமைகள் இல்லை என்பதை முழுமையாக நம்பலாம். அதை விடுத்து மீடியாக்களில் குளிரூட்டப்பட்ட அறையில் கோட் சூட் போட்டுக்கொண்டு "ஜாதிக் கொடுமைகள் இப்போதெல்லாம் கிடையாது" என்று கூறுவதைக் கேட்கும் போதெல்லாம் என்னுள் எழும் கேள்வி: "நான் செல்லும் பொது வழியில் தினமும் பயணம் செய்யும் ஜாதி வெறியை என்ன பெயர் கொண்டு அழைப்பது???"

நன்றி : SounderSS இணையத்தில் வாங்க :: NHM

வெண்மணி தியாகிகள் வீர வணக்க நாள் ஞாபகங்கள் தீ மூட்டும்! - ஜி.ராமகிருஷ்ணன்



டிசம்பர் 25, 2013. வெண்மணியின் 45-வது தினம். தேசத்தையே குலுக்கிய நாளது. 44 தலித் மக்கள், வயதானவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களை நிலச்சுவான்தார்களும், அவர்களது குண் டர்களும் உயிரோடு எரித்துக் கொன்ற நாள். அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட் டத்தில், குறிப்பாக கிழக்கு தஞ்சையில் பெரும்பகுதியாக இருந்த தலித் விவசாயத் தொழிலாளர்கள் நிலச்சுவான்தாரர்களால் விலங்கு களிலும் இழிவாக நடத்தப்பட்டனர்.
சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன. செங்கொடி இயக்கம்தான் அவர்களை தலைநிமிர வைத்தது. தோழர் பி.சீனிவாசராவ் உள்ளிட்ட பொதுவுடமை இயக்க தலைவர்கள் வலுவான போராட்டங்களை நடத்தினர். கூலி உயர்வுக்காக மட்டுமின்றி, சமூக நீதிக்காகவும் சமரசமற்ற போராட்டங்கள் நடை பெற்றன. இதனால் வயல்களில் குனிந்தே கிடந்த சேற்று மனிதர்கள் தலைநிமிர்ந்தார்கள். ஆனால் இதனை ஆதிக்க சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வஞ்சம் தீர்க்க நேரம் பார்த்திருந்தனர்.அவர்கள் நடத்திய கோரத் தாண்டவம்தான் இன்றளவும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் வெண்மணியில் பற்றவைக்கப்பட்ட நெருப்பாகும்.ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய நாகை, திருவாரூர் பகுதிகளில்) விவசாயத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்தலைமையில் போராடினார்கள்.
பேச்சு வார்த்தை மூலம் கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் (நிலச்சுவான்தார்கள் சங்கம்) குண்டர்கள் வெண்மணி கிராமத்திலுள்ள விவசாயத்தொழிலாளர்/தலித் மக்களை கொடூரமாகத் தாக்கினர். தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியாத 44 தலித் மக் கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ராமையாவின் குடிசைக்குள் நுழைந்தனர். நிலச் சுவான்தாரின் குண்டர்கள் அந்த குடிசைக்கு வெளியில் தாளிட்டு, குடிசைக்கு தீயிட்டு 44 பேரையும் கோரமாக உயிரோடு கொளுத்தினர். அந்த நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெண்மணி வீரவணக்க நாளாக அனுஷ்டித்து வருகிறது. வெண்மணியில் தலித் மக்களை தாக்குகிற போது, இங்கு பறந்து கொண்டிருக்கும் செங்கொடியை இறக்கி விட்டு நெல் உற்பத்தி யாளர்கள் சங்கக்கொடியை ஏற்றினால் நீங்கள் கேட்கும் கூலியைத் தருகிறோம் என நிலச்சுவான்தார்களின் குண்டர்கள் மிரட் டினார்கள்.
“எங்களது உயிரே போனாலும் பரவாயில்லை தலித் மக்கள் மனிதர்களாக நிமிர்ந்து வாழ, தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கப் போராடிய இந்த செங்கொடியை இறக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என தலித் மக்கள் உறுதியாக நின்றனர். இதற்குப் பிறகுதான் அந்த கோரச் சம்பவத்தை கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நிலச்சுவான்தார்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் அரங்கேற் றினார்கள். வெண்மணி கிராமம் உள்ளிட்டு, நாகை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் அக்காலத்தில் நடந்த போராட்டம் கூலி உயர்வுக்காக மட்டுமல்ல, நிலப்பிரபுத்துவச்சுரண்டலுக்கும், தீண்டாமை ஒழிப்புக்குமான போராட்டமாகத்தான் அது நடந்தது. நிலச்சுவான்தார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், விவசாயத் தொழிலாளர்கள் இயக்கத்தையும் அழிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தோழர் மைதிலி சிவராமன் 1970-ஆம் ஆண்டு கீழத்தஞ்சையில் தலித் விவ சாயத் தொழிலாளர்களையும், சில மிராசு தாரர்களையும் பேட்டி கண்டு எழுதிய கட்டு ரையில் வெண்மணி தலித் மக்கள் மீது நிலச்சுவான்தார்கள் தொடுத்த தாக்குதலின் பின்னணியை தெளிவாகக் கொண்டு வந்துள்ளார். “சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எல்லாம் அமைதியாக இருந்தது. விவசாயத் தொழிலாளர்கள் கடுமையாகத்தான் உழைத்து வந்தார்கள். என் வீட்டிற்கு கொல்லைப்புறமாக வந்து எங்களோடு அச்சத்தோடு பேசி வந்த விவசாயத் தொழிலாளர்கள் தற்போது செருப்பணிந்து வீட்டிற்கு முன் புறமாக வந்து நிற்கிறார்கள். சரியாக மாலை 5 1/2 மணிக்கு எங்கள் தலைவர் பேசுகிறார், கூட்டம் நடைபெறுகிறது, நாங்கள் செல்கிறோம் என்று சொல்லி விட்டுப் போய்விடுகிறார்கள்.என்னுடைய வீட்டிற்கு அருகாமையிலேயே செங் கொடியோடு ஊர்வலமாகச் சென்று கூட்டம் நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஆணவம் வந்து விட்டது. எங்களைக் கண்டு அஞ்சுவதில்லை. இதற்குக் காரணம் கம்யூனிஸ்டுகள்தான்” - என தோழர் மைதிலி சிவராமனிடம் வெண்மணிக்கு அருகிலுள்ள ஆலத்தம்பாடி கிராமத்தைச் சார்ந்த ஒரு மிராசுதாரர் பேட்டியின் போது கூறியிருக்கிறார்.
ஆணவம் தலித் மக்களுக்கு அல்ல, நிலச் சுவான்தார்களுக்குதான் என்பது மேற்கண்ட பேட்டியில் தெளிவாகிறது.மேற்கண்ட நிலச்சுவான்தார் அளித்த பேட்டியிலிருந்தே வெண்மணி மக்கள் மீதான தாக்குதலுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும். 1940-களில் துவங்கி ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கமும், பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒட்டுமொத்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல, தீண்டாமை ஒழிப்புக்காகவும் போராடி வருகிறது. சாதிக் கொடுமைக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமையில் நடைபெற்ற வீரமிக்க இயக்கத்தை ஒடுக்க வேண்டுமென்பதே நிலச்சுவான்தார்களின் நோக்கம். நிலச்சுவான்தார்களின் நலன் களுக்கு ஆதரவாக நின்ற அன்றைய மாநில அரசு, இத்தகைய தாக்குதலைத் தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்கவில்லை. வெண்மணியில் தலித் மக்களை தாக்கி உயிரோடு கொளுத்தினால் செங் கொடி இயக்கம் அழிந்து விடும் என நிலச் சுவான்தார்கள் மனப்பால் குடித்தார்கள்.
ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், செங்கொடி இயக்கமும் முன்பைவிட முனைப்பாக செயல்பட்டு வருகிறது. வெண் மணித் தீயில் வெந்த அந்த 44 கண்மணிகள் தீண்டாமை ஒழிப்புக்கான/ நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் தியாகிகள் ஆனார்கள். இன்றும் தமிழகத்தில் ஏன் நாடு முழுவதும் நிலப்பிரபுத்துவச் சுரண்டலும், தீண்டாமைக் கொடுமையும் பல வடிவங்களில் நீடித்து வருகின்றன.தலித் மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இணைந்து போராடியதால்தான் கிழக்குத் தஞ்சை மாவட்டத்தில் ஓரளவு உரிமைகளை பெற முடிந்தது. வர்க்க ரீதியாக உழைக்கும் மக்கள் அணிதிரண்டதால்தான் அது சாத்தியமானது. ஆனால் இன்றைக்கு தலித் மக்களுக்கு எதிராக சில சாதி சங்கத்தலைவர்கள் அணிதிரளும் அவலக் காட் சியை தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அனைத்துப் பகுதி மக்களையும் பாதிக்கும் பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்துவதற்கு பதிலாக, எளியமக்களை சாதியின் பெயரால் மோத விடும் சதி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
கிராமப்புறங்களில் விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. விவசாயம் நலிந்து ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பிழைப்புக்காக நகரங் களை நோக்கி குடிபெயர்ந்து செல்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்து மக் கள் தொகையில் ஒரு கோடி விவசாயத் தொழிலாளர்களில் பாதிப்பேர் தலித் மக்கள். மீதி பேர் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். சாதி வித்தியாசம் இல்லாமல் விவசாயத் தொழிலாளர்களும், விவசாயிகளும் விவசாயத்தைப் பாதுகாக்க, விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்க, தீண்டாமை ஒழிப்புக்காக, நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக போராட வெண்மணி தினத்தில் சூளுரைப்போம்.

நன்றி :: தீக்கதிர்

ராமைய்யாவின் குடிசை








Kids in Adi-Dravidar Schools do Menial Work - The Indian Express


Students of over 60 per cent State-run Adi-Dravidar welfare schools in Tamil Nadu are forced to do menial work, according to a year-long sample survey conducted by a child rights outfit. The survey Samakalvi Iyyakkam-Tamil Nadu did - with support from Child Rights and You (CRY) - in 90 select Adi-Dravidar schools in six northern districts of the State, found that children, besides studying, had to sweep the classrooms and clean the loos because of lack of manpower.
It also found that over 50 per cent of the schools have just one classroom, which can be quite chaotic for both teachers and students. About 29 per cent of these school buildings were in a very poor state and require immediate attention as they pose a threat to students, while 56 per cent of the concrete buildings were of moderate quality.
The study, conducted in 17 schools in each of the six northern districts, also found that they lacked proper toilets, playground, furniture, drinking water, quality noon-meal or kitchen facility.
Close to 50 per cent of the schools had no furniture and children were made to sit on damaged floors. In another 18 per cent of schools, students were made to sit on dirty mats.
“Though all the 90 schools had electricity supply, most of the buildings did not have enough fans or lights. Most of the classrooms were not properly lit while fans and lights were provided only for teachers,” the report said.
About 30 per cent of these schools don’t have a toilet. In the ones that had loos - 55 out of 90 - most of them were not usable as they neither had doors nor water supply to keep them stench-free. Toilets of some schools were quite far away from the classrooms, which made them unsafe for girls.
Scope for extra-curricular activities in these schools were limited as over 60 per cent of them did not have a playground. Even some of those that had high school status lacked proper playgrounds. Besides, many schools were surrounded by thorny bushes while some had been encroached upon, the report said.

கழிப்பறையை சுத்தம் செய்ய மறுத்ததனால் தலித் மீது கொடூர தாக்குதல்

வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகள் கைது செய்யபடவில்லை

பாதிக்கப்பட்ட தலித் முதியவர் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிற அவலம்

பத்திரிக்கைச் செய்தி 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகில் உள்ள கிராமம் கூக்கால். இக்கிராமத்தில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட இந்து அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த திரு.ஆர்.வேலன் (55) த/
பெ.ராமன் (லேட்) என்பவர் 3 சாதி இந்து கும்பலால் கடந்த 09.12.2013 அன்று கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு வேலன் அவர்கள் மறுத்ததனால் இக்கொடிய தாக்குதல் நடந்துள்ளது. இதுகுறித்து கொடைக்கானல் காவல்நிலையத்தில் குற்றஎண்.392/2013 பிரிவுகள் 323 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(1)(2), 3(1)(10) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து 10 நாட்களாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.

கொடைக்கானல் அருகில் உள்ள கூக்கால் கிராமத்தில் வசித்து வரும் வேலன் அவர்கள், தண்ணீர் திறந்து விடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்கிற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். கடந்த 09.12.2013 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் தம்முடைய பணியில் வேலன் ஈடுபட்டு கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு கூக்கால் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் என்பவரின் மகன் வேல்மயில் என்பவர் வந்துள்ளார். அங்கிருந்த வேலனிடம், எங்கள் வீட்டில் கழிப்பறை அடைத்துள்ளது. மேலும் கழிப்பறை அசுத்தமாக உள்ளது. நீ அதை சுத்தம் செய்து கொடு என்று கூறியுள்ளார். அதற்கு வேலன் அவர்கள், நான் இதுபோன்ற பணிகளை எல்லாம் செய்வது கிடையாது என்று கூறியிருக்கிறார். அதற்கு சாதி ரீதியாக இழிவாகப்பேசிய வேல்மயில், உங்க சாதியே மலம் அள்ளுகிற சாதி தானே என்னடா, மலம் அள்ள வர மறுக்கிறாய் என்று கூறி கன்னத்தில் அறைந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகத்தின் மற்ற மகன்களான கர்ணன், பிரதிவிராஜ் ஆகியோரும் இணைந்து கொண்டு அங்கிருந்த விறகு கட்டையால் வேலன் அவர்களை கடுமையாக அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் காயமடைந்த வேலன் மயங்கிவிழுந்துள்ளார். 

பலத்த காயமுடன் இருந்த வேலன் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு கொடைக்கானல் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. கடந்த 10 நாட்களாக வேலன் மருத்துவமனையில்உள்நோயாளியாக இருந்து சிகிச்சை எடுத்து வருகிறார். 

இதுகுறித்து கொடைக்கானல் காவல்நிலைய போலீசாரிடம் கேட்டபோது, குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர் தேடி வருகிறோம் என்று கூறினார்கள். கழிப்பறையை சுத்தம் செய்ய மறுத்ததனால் இத்தகைய கொடூர தாக்குதல் நடந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த 10 நாட்களாக வேலன் சிகிச்சை எடுத்து வருகிறார். இதிலிருந்து அவருடைய காயத்தின் கொடூர தன்மையை புரிந்து கொள்ளலாம். ஆனாலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தற்போது வேலனை அடித்த நபர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீனுக்காக முயற்சி எடுத்து வருவதாக அறிய வருகிறோம். 
தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த வேலன் மீது இக்கொடிய தாக்குதல் நடத்திய கும்பலுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் வன்கொடுமையில் ஈடுபடுகிற குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதனை உணர்ந்து போலீசார், குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுக்க தடை விதிக்க வேண்டும். 

இந்த தளத்தில் இடம் பெறும் எந்த கட்டுரையும் தள நிர்வாகிகளின் சொந்த கருத்துக்கள் அல்ல. அந்தந்த ஆவணங்களின் உரிமை மற்றும் கருத்துக்களுக்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மற்றும் படைப்பாளியையே சாரும்.மேலும் இந்த தளம் எந்த லாப நோக்கத்தோடும் இயங்கவில்லை. ஆவணப்படுத்தலுக்கான ஒரு சேமிப்பு கிடங்கே இத்தளம்
உங்கள் பகுதி செய்திகளை இத்தளத்தில் வெளியிட admin@excludedindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்திகளை புகைப்படத்துடன் அனுப்புங்கள்
Powered by Blogger.

வகைகள்

Atrocities (3) Ayyankali (1) BBC (1) Caste discrimination (2) Conversion (1) Cuddalore (1) Daily Baskar (1) Dalitcamera (1) Devyani Kobragade (3) DICCI (1) DNA (1) Gujarat (1) Hyderabad (1) IBNLive (1) Lokpal Bill (1) Madurai (3) Protest (1) Punjab (1) READ (1) Rediff (1) SFI (1) Siddalingaiah (1) Tehelka (6) The Economic Times (2) The Hindu (10) The Indian Express (8) Times of India (8) US (1) Women (3) ZeeNews (1) அ.மார்க்ஸ் (2) அதிமுக (1) அம்பேத்கர் (3) அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்துதல் (8) அய்யன்காளி (1) அரசாணை (2) அருந்ததிய மக்கள் (2) ஆதவன் தீட்சண்யா (2) ஆம் ஆத்மி (10) ஆய்வு (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியா டுடே (1) இமையம் (1) இலக்கியம் (1) இளவரசன் (1) எவிடன்ஸ் (5) எஸ்.வி.ராஜதுரை (1) கதை (2) கரு.அழ.குணசேகரன் (1) கருத்தரங்கம் (1) கரூர் (2) கவிதை (1) கவின்மலர் (1) கன்னடா (1) காங்கிரஸ் (4) காஞ்சிபுரம் (2) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் (1) கீழ் வெண்மணி (12) கீற்று (1) கொலை (2) சத்தியம் டிவி (1) சமகல்வி இயக்கம் (1) சமநிலைச் சமுதாயம் (1) சாதிய கொலைகள் (1) சிதம்பரம் (1) சென்னை (1) சோளிங்கர் (2) தந்தி டிவி (1) தருமபுரி (2) தாக்குதல் (2) தாட்கோ (1) தி இந்து (1) திண்டுக்கல் (2) திண்ணை (1) திமுக (1) திராவிடர் கழகம் (1) திருச்சி (1) தில்லி (8) திவ்யா (1) தினகரன் (2) தினத்தந்தி (1) தினமணி (5) தினமலர் (1) தீக்கதிர் (5) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) துப்புரவுத் தொழிலாளர்கள் (1) தூத்துக்குடி (2) தேர்தல் (8) தொழிலாளர்கள் (1) நக்கீரன் (1) நத்தம்காலனி (1) நரிக்குறவ (1) நாமக்கல் (1) நிலக்கோட்டை (1) பகுஜன் சமாஜ் (2) பாமக (3) பாஜக (2) பிபிசி (1) பின் நவீனத்துவம் (2) புதிய தலைமுறை (2) புதுக்கோட்டை (2) புதுச்சேரி (3) பெத்தவன் (1) பெரியார் (1) மதமாற்றம் (1) மதிப்புரை (3) மத்தியப்பிரதேசம் (1) மறியல் (1) மனுசங்கடா ! நாங்க மனுசங்கடா !! (1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) மாலைமலர் (7) மீனா (1) ரவிக்குமார் (1) ராகுல்காந்தி (1) வன்கொடுமை (5) விசாரணைக்கைதிகள் (1) விசிக (5) விழுப்புரம் (1) வேலாயுதபுரம் (1) வேலூர் (4)

- Copyright © Excluded-India -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -