Monday, December 30, 2013
விழுப்புரம், டிச.30–
விழுப்புரம் அருகே தஞ்சாவூர்–கும்பகோணம் சாலையில் அரசமங்கலம் என்ற கிராமத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு யாரோ மர்ம ஆசாமிகள் அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்று விட்டனர்.
அதுபோல் அரசமங்கலம் அருகே வி.அகரம் கிராமத்தில் இருந்த அம்பேத்கர் சிலையும் உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இன்று காலை இதனை கண்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடங்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் திறள தொடங்கினர். மேலும் அக்கட்சியில் மாநில பொது செயலாளர் சிந்தனை செல்வன் மற்றும் நிர்வாகிகள் ஆற்றலரசு, தமிழ்மாறன் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடங்களை பார்வையிட்டனர். இதனால் 2 இடங்களிலும் பதட்டம் ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதிகளில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில் வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்
Source :: மாலைமலர்
விழுப்புரம் அருகே இரு இடங்களில் அம்பேத்கர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு உடைக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அருகே தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் அரசமங்கலம் என்ற கிராமம் அருகே அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை ஞாயிற்றுக்கிழமை
நள்ளிரவு மர்ம நபர்கள் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
அதுபோல் அரசமங்கலம் அருகே வி.அகரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையையும் மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவத்தை கேள்விப்பட்ட பல்வேறு தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அப் பகுதிகளில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
உடனடியாக சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைகள் துணியால் மூடப்பட்டன. சிலைகள் சீரமைத்தப்பின் திறக்கப்பட உள்ளன. இச் சம்பவத்தைத் தொடர்ந்து இரு கிராமங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலர் சிந்தனைச் செல்வன் கூறுகையில்: வரும் ஜனவரி 2 ஆம் தேதி சமூக நல்லிணக்க நாளாக நாங்கள் கடைபிடிக்கிறோம். அதற்குள் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை சரி செய்யப்பட்டு அதற்கு 1000 மாலைகள் அணிவிக்கப்படும். வன்னியர் இனத்தைச் சேர்ந்த 100 பேர் மாலை அணிவிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றார்.
படங்கள் :: Joshua Isaac