Thursday, December 19, 2013
திருவாரூர், டிச. 19-
வீரவெண்மணி தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 25ம் தேதி இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில், மாநில சிறப்பு மாநாடு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
திருவாரூர் வர்த்தகர் சங்க கட்டடத்தில் மாநாடும், கீழ்வேளூரில் பேரணி-பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.மாநில தலைவர் பி.உச்சிமாகாளி மாநாட் டிற்குத் தலைமை வகிக்கிறார். மாவட்டத் தலைவர் பிரகாஷ் வரவேற்றுப்பேசுகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலை ஞர்கள் சங்க மாநில துணைச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா மாநாட்டை துவக்கிவைத்துப்பேசுகிறார்.
“சாதிய ஒடுக்குமுறைக்கான போராட்டத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் உரையாற்றுகிறார். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் நிறைவுரையாற்றுகிறார்.
மாவட்டச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன் நன்றி கூறுகிறார். கீழ்வேளூரில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக மாணவர்கள் சங்கமிக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி வாழ்த்துரை வழங்குகிறார். நாகை மாவட்ட செயலாளர் பி.மாரியப்பன் நன்றி கூறுகிறார்.
இந்த மாநாட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர் சங்க நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
நன்றி :: தீக்கதிர்