Wednesday, December 18, 2013
மதுரை உசிலம்பட்டிக்கு அருகேயுள்ள தொட்டபநாயக்கனூர் கிராமத்தில் வாழும் பளியர் பழங்குடியினர் அதிர்ச்சியில் உள்ளனர். அக்கிராமத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் அக்டோபர் 25 அன்று பக்கத்து மலையின் அடிவாரத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அருகில் உள்ள வாசி நகரில் வாழும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிவராமன், வாசி, ராஜி ஆகியோர் 11 வயது, 14 வயது, 13 வயது ஆகிய குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியதாக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது. சம்பவம் நடைபெற்றவுடன் குழந்தைகளிடம் வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் விடுத்த அறிக்கை தெரிவிக்கிறது.
26ம் தேதி காலை உசிலம்பட்டி மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் புகார் அளித்தவுடன், மதுரை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இரு குழந்தைகள் முழுமையான பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சிவராமன் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் மற்றொருவரான வாசி ஜாமீனில் வெளிவந்துவிட்டதாகவும் இந்தியா டுடேயிடம் தெரிவித்தார் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம். முதல் தகவல் அறிக்கையில் பாலியல் துன்புறுத்தல் முயற்சி என்று காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தாலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படாமலிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் நவம்பர் 10 அன்று உசிலம்பட்டியில் கிராம மக்கள், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்துடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ”கிராமத்தில் உள்ள 69 பழங்குடி குடும்பங்களும் கலந்துகொண்டன. மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு கொடுத்திருக்கிறோம். நிவாரணத்துக்கு ஏற்பாடு செய்வதாக அவர் உறுதி அளித்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருக்கிற இடத்தில்தான் ரேசன் கடை இருக்கிறது. அங்கே சென்று பொருட்களை வாங்கமுடியாத நிலையில் இருக்கின்றனர் பழங்குடியின மக்கள். ஆகவே அரசு உடனடியாக ஒரு நடமாடும் ரேசன் கடையையோ அல்லது பகுதி நேர ரேசன் கடையையோ பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் தொடங்கவேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும். காவல்துறை இப்படி குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்துகொள்வது கடும் கண்டனத்துக்குரியது” என்கிறார் பெ.சண்முகம். தமிழக அரசின் தலையீட்டை வேண்டி நிற்கின்றனர் பழங்குடி மக்கள். அரசு தலையிட்டு அவர்களுக்கு நீதி வழங்குமா?
(நன்றி : இந்தியா டுடே - கவின்மலர் )