Thursday, December 19, 2013


இன்று (18-12-2013) சாதிவெறிப்பிடித்த பா.ம.க வை சார்ந்த வன்னியர்களின் தாக்குதலுக்குள்ளான வேலூர் மாவட்டம், நீலகண்டராயன்பேட்டை, காட்டரம்பாக்கம், அரியூர், சோகனூர், பாராஞ்சி, நதிவெடுதாங்கல் ஆகிய சேரிகளை பார்வையிட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி ஒன்றிய, நகர மேலிடப் பொறுப்பாளர் பாசறை செல்வராசு, அண்ணன் விடியல் இரா.வெற்றித்தமிழன், காஞ்சி தென்றல் கலைக்குழுவைச் சார்ந்த தோழர் சந்தோசுThendral Kalaikuzhu ஆகியோருடன் நான் சார்ந்திருக்கின்ற ஊடக மையம் Kanchi Vck சார்பில் நானும் சென்றிருந்தேன். தோழர் ஜோசுவா அவர்களின் உதவியினால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த்தேசிய விடுதலைப் பேரவையின் வேலூர் மாவட்ட துணை செயலாளர் சரவணன், ஒன்றிய நிர்வாகி வேலாயுதம் ஆகிய தோழர்களுடன் சாதிவெறியர்களின் தாக்குதலுக்குள்ளான சேரிகளுக்கு சென்றிருந்தோம்.

நீலகண்டராயன் பேட்டை சேரியைத் தொடர்ந்து காட்டரம்பாக்கம் சேரியை பார்வையிட்டோம். நாங்கள் பார்வையிட்டதில்...

நீலகண்டராயன் பேட்டை சேரியை விட காட்டரம்பாக்கம் சேரி சாதிவெறியர்களின் தாக்குதலில் மிகுந்த பாதிப்புகுள்ளாயிருந்தது. இங்கே சுமார் 15 காவல்துறையினர் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தனர். கிட்டத்தட்ட தருமபுரி சேரிகளை தாக்கிய அதே திட்டத்துடன் தான் இந்த தாக்குதலும் நடந்திருப்பதாக அறிய முடிகிறது.

காட்டரம்பாக்கம் சேரியில் சுமார் 30 வீடுகள் இருக்கும். 
நீலகண்டராயன் பேட்டையைப் போன்றே அதே கும்பல் ௫௦ பேர் கொண்ட பா.ம.க. சாதிவெறிப்பிடித்த வன்னியர்கள் சேரியின் பின்புற வழியாக புகுந்து வீடுகளை கடுமையாக தாக்கியுள்ளனர். 

இங்கேயும் முழுமையாக அரசின் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் தான். இடையிடையே கூரை வீடுகளும் உள்ளன. ஒரு கூரை வீட்டினை கொளுத்தியுள்ளனர். அதற்குள் சேரிமக்கள் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டுள்ளன. குடிநீர்த்தேக்க தொட்டி கூட கத்தியால் வெட்டப்பட்டிருக்கின்றது. தொலைக்காட்சிப் பெட்டிகள், இருச்சக்கர வாகனங்கள், குண்டான் சட்டி உள்ளிட்ட சமையல் பாத்திரங்கள். ஆண்கள் பெண்கள் என எவரையும் விட்டுவைக்காமல் தாங்கள் எடுத்து வந்திருந்த ஆணிகளால் சுற்றப்பட்ட கட்டையில் கடுமையாக தாக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 10 இருச்சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. 

காட்டரம்பாக்கம் சேரியை சார்ந்த பெண்களிடம் விசாரித்தோம்..

சுலோச்சனா என்ற தாயார் ஒருவர்..

நைட் பன்னன்ற மணி இருக்கும் சார். ஓனு சத்தம் போட்டுக்குனு எங்க ஊருக்குள்ள வந்து தெரு லைட் அடிச்சி ஒடைச்சிட்டு இருட்டுல எல்லார் வீட்டையும் அடிச்சினு இருந்தாங்க சார். என் பையனையும் என் வீட்டுக்காரரையும் கட்டைல சுத்தி வெச்சிந்த ஆணியால அடிச்சாங்க. நானு பயத்துல அய்யோ யம்மானு கத்தினு வெளிய வந்தன். என்ன ஒருத்தன் பறத் தேவடியாளே என்னடி கத்துறனு ஓங்கி கட்டையால அடிச்சான் சார். வலியே தாங்க முடில. என் சோல்டர் எறங்கிப்போச்சு சார்னு அழுது புலம்பினாங்க.

மல்லிகா என்றொரு அம்மா..

50 பேரு இருப்பாங்க சார். எல்லாரும் மூஞ்ச மறைச்சிக்கினு முகமூடி போட்டுக்கினு வந்து ஒரு வீடு விடாம அடிச்சி ஓடைச்சினு, தெரு லைட்டலாம் அடிச்சி ஒடச்சிட்டு, இருட்டுல வீட்டுல இருந்த ஆம்பளைங்கள வெளிய இழுத்துனு வந்து அடிச்சானுங்க சார். வீட்டு ஓட்ட ஓடைச்சாங்க. சின்ன சின்ன செடிய கூட கத்தியால வெட்டிப் போட்டுட்டானுங்க பாவிங்க. பறத் தேவடியா பசங்களுக்கு பைக் கேக்குதான்னு என் பையனோட புது வண்டிய அடிச்சி ஓடச்சாங்க சார். அந்த வண்டி பைனான்ஸ் கட்டி எடுத்தான் சார் என் புள்ள.

ஏன்மா இப்படி உங்கள அடிக்கணும்? உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன முன்விரோதமானு கேட்டதக்கு, ஒரு பிரச்சனையும் இல்ல சார். எல்லாரும் தாயா புள்ளயா தான் பழகுவோம். ஏன்தான் இப்டி செஞ்சாங்கனே தெர்லன்னு அப்பாவி போல கூறினார். 

சரி இதுவர்லும் யார்லாம் வந்தாங்கனு கேட்டோம். அதுக்கு அந்தம்மா இதுவர்லும் யாரும் வரல சார். எங்க கூட வந்த வாலாஜா பகுதி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சரவணன், வேலாயுதம் இருவரையும் காண்பித்து இந்த தம்பிங்க தான் அடிக்கடி வந்து பாத்துட்டு போறாங்கனு சொல்லி அழுதாங்க. அவங்க வந்து அடிக்கும்போது வூட்டுக்குள்ள பூந்துக்குனு நீங்க என்ன செஞ்சிதீங்க. வெளிய வந்து பாக்ரதானணு போலீஸ் காரங்க எங்கள குறுக்கு விசாரண பண்றாங்க சார். வெளிய வர ஆம்பளைங்களையே அடிக்குரானுங்க. பொம்பளைங்களுக்கும் அடிக்குரானுங்க. என்ன சார் பண்றது. ஒடஞ்சி போன வீட்டு ஜன்னல் கண்ணாடி, ஓட்டலாம் போலீஸ்காரங்களே பெருக்கி சுத்தம் பண்றாங்க சார். எங்கள ச்பெருக்க சொன்னங்க நாங்க முடியாதுனு சொல்லிட்டோம்.

எல்லாத்துக்கும் காரணம் பா.ம.க. கட்சில இருக்குற சாதிவெறி புடிச்சவங்க தாணு கதறி அழுகின்றார்கள் காடரம்பாக்கம் சேரிபெண்கள்.

நீலகண்டராயன் பேட்டை சேரியை தாக்கிய அதே பா.ம.க. சாதிவெறி கும்பல் தான் காட்டரம்பாக்கம் சேரியையும் தாக்கியுள்ளனர். இவ்வளவு நடந்திருக்கின்ற ஒரு சேரியை எட்டிப்பார்த்து எந்தவொரு ஊடகமும் இதுவரை செய்தியை வெளியிடவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை.


நன்றி ::  Paruthikulam Mathi Aadhavan

Paruthikulam Mathi Aadhavan

இந்த தளத்தில் இடம் பெறும் எந்த கட்டுரையும் தள நிர்வாகிகளின் சொந்த கருத்துக்கள் அல்ல. அந்தந்த ஆவணங்களின் உரிமை மற்றும் கருத்துக்களுக்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மற்றும் படைப்பாளியையே சாரும்.மேலும் இந்த தளம் எந்த லாப நோக்கத்தோடும் இயங்கவில்லை. ஆவணப்படுத்தலுக்கான ஒரு சேமிப்பு கிடங்கே இத்தளம்
உங்கள் பகுதி செய்திகளை இத்தளத்தில் வெளியிட admin@excludedindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்திகளை புகைப்படத்துடன் அனுப்புங்கள்
Powered by Blogger.

வகைகள்

Atrocities (3) Ayyankali (1) BBC (1) Caste discrimination (2) Conversion (1) Cuddalore (1) Daily Baskar (1) Dalitcamera (1) Devyani Kobragade (3) DICCI (1) DNA (1) Gujarat (1) Hyderabad (1) IBNLive (1) Lokpal Bill (1) Madurai (3) Protest (1) Punjab (1) READ (1) Rediff (1) SFI (1) Siddalingaiah (1) Tehelka (6) The Economic Times (2) The Hindu (10) The Indian Express (8) Times of India (8) US (1) Women (3) ZeeNews (1) அ.மார்க்ஸ் (2) அதிமுக (1) அம்பேத்கர் (3) அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்துதல் (8) அய்யன்காளி (1) அரசாணை (2) அருந்ததிய மக்கள் (2) ஆதவன் தீட்சண்யா (2) ஆம் ஆத்மி (10) ஆய்வு (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியா டுடே (1) இமையம் (1) இலக்கியம் (1) இளவரசன் (1) எவிடன்ஸ் (5) எஸ்.வி.ராஜதுரை (1) கதை (2) கரு.அழ.குணசேகரன் (1) கருத்தரங்கம் (1) கரூர் (2) கவிதை (1) கவின்மலர் (1) கன்னடா (1) காங்கிரஸ் (4) காஞ்சிபுரம் (2) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் (1) கீழ் வெண்மணி (12) கீற்று (1) கொலை (2) சத்தியம் டிவி (1) சமகல்வி இயக்கம் (1) சமநிலைச் சமுதாயம் (1) சாதிய கொலைகள் (1) சிதம்பரம் (1) சென்னை (1) சோளிங்கர் (2) தந்தி டிவி (1) தருமபுரி (2) தாக்குதல் (2) தாட்கோ (1) தி இந்து (1) திண்டுக்கல் (2) திண்ணை (1) திமுக (1) திராவிடர் கழகம் (1) திருச்சி (1) தில்லி (8) திவ்யா (1) தினகரன் (2) தினத்தந்தி (1) தினமணி (5) தினமலர் (1) தீக்கதிர் (5) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) துப்புரவுத் தொழிலாளர்கள் (1) தூத்துக்குடி (2) தேர்தல் (8) தொழிலாளர்கள் (1) நக்கீரன் (1) நத்தம்காலனி (1) நரிக்குறவ (1) நாமக்கல் (1) நிலக்கோட்டை (1) பகுஜன் சமாஜ் (2) பாமக (3) பாஜக (2) பிபிசி (1) பின் நவீனத்துவம் (2) புதிய தலைமுறை (2) புதுக்கோட்டை (2) புதுச்சேரி (3) பெத்தவன் (1) பெரியார் (1) மதமாற்றம் (1) மதிப்புரை (3) மத்தியப்பிரதேசம் (1) மறியல் (1) மனுசங்கடா ! நாங்க மனுசங்கடா !! (1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) மாலைமலர் (7) மீனா (1) ரவிக்குமார் (1) ராகுல்காந்தி (1) வன்கொடுமை (5) விசாரணைக்கைதிகள் (1) விசிக (5) விழுப்புரம் (1) வேலாயுதபுரம் (1) வேலூர் (4)

- Copyright © Excluded-India -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -