Monday, December 23, 2013
வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகள் கைது செய்யபடவில்லை
பாதிக்கப்பட்ட தலித் முதியவர் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிற அவலம்
பத்திரிக்கைச் செய்தி
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகில் உள்ள கிராமம் கூக்கால். இக்கிராமத்தில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட இந்து அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த திரு.ஆர்.வேலன் (55) த/

பெ.ராமன் (லேட்) என்பவர் 3 சாதி இந்து கும்பலால் கடந்த 09.12.2013 அன்று கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு வேலன் அவர்கள் மறுத்ததனால் இக்கொடிய தாக்குதல் நடந்துள்ளது. இதுகுறித்து கொடைக்கானல் காவல்நிலையத்தில் குற்றஎண்.392/2013 பிரிவுகள் 323 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(1)(2), 3(1)(10) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து 10 நாட்களாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.
கொடைக்கானல் அருகில் உள்ள கூக்கால் கிராமத்தில் வசித்து வரும் வேலன் அவர்கள், தண்ணீர் திறந்து விடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்கிற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். கடந்த 09.12.2013 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் தம்முடைய பணியில் வேலன் ஈடுபட்டு கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு கூக்கால் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் என்பவரின் மகன் வேல்மயில் என்பவர் வந்துள்ளார். அங்கிருந்த வேலனிடம், எங்கள் வீட்டில் கழிப்பறை அடைத்துள்ளது. மேலும் கழிப்பறை அசுத்தமாக உள்ளது. நீ அதை சுத்தம் செய்து கொடு என்று கூறியுள்ளார். அதற்கு வேலன் அவர்கள், நான் இதுபோன்ற பணிகளை எல்லாம் செய்வது கிடையாது என்று கூறியிருக்கிறார். அதற்கு சாதி ரீதியாக இழிவாகப்பேசிய வேல்மயில், உங்க சாதியே மலம் அள்ளுகிற சாதி தானே என்னடா, மலம் அள்ள வர மறுக்கிறாய் என்று கூறி கன்னத்தில் அறைந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகத்தின் மற்ற மகன்களான கர்ணன், பிரதிவிராஜ் ஆகியோரும் இணைந்து கொண்டு அங்கிருந்த விறகு கட்டையால் வேலன் அவர்களை கடுமையாக அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் காயமடைந்த வேலன் மயங்கிவிழுந்துள்ளார்.
பலத்த காயமுடன் இருந்த வேலன் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு கொடைக்கானல் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. கடந்த 10 நாட்களாக வேலன் மருத்துவமனையில்உள்நோயாளியாக இருந்து சிகிச்சை எடுத்து வருகிறார்.
இதுகுறித்து கொடைக்கானல் காவல்நிலைய போலீசாரிடம் கேட்டபோது, குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர் தேடி வருகிறோம் என்று கூறினார்கள். கழிப்பறையை சுத்தம் செய்ய மறுத்ததனால் இத்தகைய கொடூர தாக்குதல் நடந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த 10 நாட்களாக வேலன் சிகிச்சை எடுத்து வருகிறார். இதிலிருந்து அவருடைய காயத்தின் கொடூர தன்மையை புரிந்து கொள்ளலாம். ஆனாலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தற்போது வேலனை அடித்த நபர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீனுக்காக முயற்சி எடுத்து வருவதாக அறிய வருகிறோம்.
தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த வேலன் மீது இக்கொடிய தாக்குதல் நடத்திய கும்பலுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் வன்கொடுமையில் ஈடுபடுகிற குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதனை உணர்ந்து போலீசார், குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுக்க தடை விதிக்க வேண்டும்.

நன்றி :: எவிடன்ஸ் கதிர்