Tuesday, December 24, 2013



நிலம் இல்லாதவனுக்கு நிலம் வாங்கி தரனும் என்ற எண்ணம் பேய் புடிச்ச மாதிரி மனசுக்குள்ள. வீடு, காடு இதை தவிர வேற எண்ணம் எதுவுமே இல்லை.

நாகபட்டினத்தில் நிலசுவந்தார் ஒருவர் சபதம் போட்டார். ஒரே நாளில் ரெஜிஸ்டர் பண்ணுவதாக இருந்தால் உடனடியாக கேட்ட நிலத்தை தரே
ன் என்றார். முழு பணத்தையும் தர வேண்டும் என்றார். என்னிடம் பணம் கிடையாது. நம்பிக்கை மட்டும், துணிவு மட்டும், நான் பிராத்திக்கின்ற வள்ளலாரின் பக்தி மட்டும் துணையாக...உடனடியாக சரி என்றான்.

அவரிடம் 1,040 எக்கர் நிலம் இருந்தது. அதை வாங்க வேண்டும். தாட்கோ நிதி மட்டும் கிடைத்தால் போதும், வருவாய் துறையில் தலித்துகளுக்கு பத்திரபதிவு செய்வதற்கு உள்ள கழிவுத் தொகை இருப்பதால் வேறு செலவு கிடையாது.

கலெக்டர் ஜவஹரிடம் சென்றேன் . 1,040 ஏக்கர் நிலம் ரெடியாக இருக்கிறது, நிலசுன்வந்தர் குறைந்த விலைக்கு கொடுக்க முன்வந்துள்ளார். அனால் நிலசுவந்தார் ஒரே நாளில் ரெஜிஸ்டர் பண்ண வேண்டும் என்கிறார் என்றேன். உங்கள் உதவி கிடைத்தால் ஏழை மக்களுக்கு வீடு கிடைக்கும் என்றேன்.பயனாளிகள் தயாராக உள்ளனர் என்றேன்.

கலெக்டர் உடனடியாக ஒரு ஆர்டர் போட்டார் . எல்லா VAO, தாசில்தார் மற்ற அதிகாரிகளைவரச் சொன்னார். அடுத்த நாள் காலை எல்லோரும்வந்துவிட்டனர் .நானும் பயனளிகளுடன் வர,உடனடியாக ரேஜிஸ்டரேசன் துவங்கியது.கலை 10 மணி ஆரம்பித்தது அடுத்த நாள் கலை 3 மணிக்குத்தான் முடிந்தது. கலெக்டர் கூடவே இருந்தார்.அவரை ஓய்வு எடுக்கசொன்னபோது சிரித்துவிட்டு என்னுடனே இருந்தார். எல்லா பயனளிகளுகும் நிலப்பத்திரம் ரெடி ஆனது.

அடுத்த நாள் மெட்ராஸ்ல் வருவாய் துறை அதிகாரியைச் சந்தித்து பத்திர பதிவு தொகையில் கழிவு இருப்பதைச் சொல்லி, பதிவிற்கு அனுமதி கேட்டேன். அதிர்ந்துபோனார். "அரசாங்கத்திற்கு இது பெரிய நஷ்டம்"என்றார். மேலும் இதுபற்றி விவதிதுவிட்டு சொல்வதாக சொன்னார்.

ஒரு வேலை ஆரம்பித்தால்எனக்கு அதை உடனடியாக முடித்தாக வேண்டும். பஸ் பிடித்து முதலமைச்சர் கலைஞர் வீட்டுக்குப் போனேன்.செக்யூரிட்டி போலீஸ் என்னை விசாரித்துவிட்டு நான் ஏன் தனியாக வந்தேன் என்று
கேட்டனர். "நீங்கள் எல்லாம்என்னுடைய நண்பர்கள் தான் என்றான்." சிரித்துவிட்டு என்னை கலைஞரை சந்திக்க அனுப்பினர். விவரத்தை சொன்னவுடன் கலைஞர் யோசிக்கவில்லை. வருவாய் துறை அதிகாரிக்கு உத்தரவு போட்டார். என்னை திருப்பி அனுப்பிய வருவாய் அதிகாரி வரவேற்றார். எல்லா பத்திரங்களுக்கும் கழிவு உறுதி ஆனது. 

அடுத்ததாக தாட்கோ அலுவலகம் சென்றேன். நிலையை விலக்கி மிக அவசரமாக நிதி வேண்டும் என்றேன். தாட்கோ அதிகாரிகள் நிலைமை உணர்ந்து சீக்கிரமாக நிதி கொடுத்தனர். மிகுந்த சந்தோசத்துடன் நாகப்பட்டினம் வந்தேன். தாட்கோ நிதி மற்றும் வருவாய்த் துறை பதிவு தொகை கழிவு என எல்லாம் கை கூடியது. சொன்னபடி நிலசுவந்தரிடம் பணத்தை கொடுத்து 1,040 பத்திரங்களும் ஒரே நாளில் பதிவாகியது. - கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்


நன்றி :: Pramila Krishnan 

வெண்மணி பற்றிச் சொல்லுங்க

        1968 டிசம்பர் 25 ராத்திரி,------எனக்கு தூக்கம் வரல, காந்திகிராமத்துல எங்க வீட்டுக்காரர் ஒரு சின்ன ஆசிரமம் கட்டி இருந்தார், நாங்க அங்க இருந்தோம், காலையில செய்திய பேப்பர்ல பாத்துட்டு குன்றக்குடி அடிகளார்ட்ட ஓடினேன், அவர்கிட்ட சொல்லிட்டு , 26 காலை 4 மணிக்கு வெண்மனி போய் சேர்ந்துட்டேன், போயி முதல்ல பார்த்தது ஒரு குழந்தைய வீசி எரிஞ்சிருக்காங்க அது தென்னமரத்துல மோதி இறந்து கிடந்தது, தென்னமரத்த சுத்தி ரெத்தம் கிடந்தது, இனிமே இந்த இடத்த விட்டு போகக் கூடாதுன்னு  முடிவு பண்ணிட்டேன் --- ஆல் இண்டியா சர்வோதய சங்க தலைவரா இருந்தேன், கம்யூனிஸ்டுகள் உள்ளிருந்து மக்களுக்கு உதவி செஞ்சிகிட்டு இருந்தாங்க, என்னக் கண்டா ஆகாது, வந்துட்டா காங்கிரஸ்காரின்னு திட்டுவாங்க, இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணும்கற தீர்மானத்துல எல்லாத்தையும் பொறுத்துகிட்டு இருந்தேன். கொஞ்ச கொஞ்சமா அங்கிருந்த பெண்களோட பழக ஆரம்பிச்சேன், 5 மணிக்கே ஆண்டை வீட்டுக்குப் போயி வேல செஞ்சிட்டு பழைய சோறு வாங்கிகிட்டு வருங்க, அதுல கொஞ்சம் தைரியமான பெண்கள தேர்வு செஞ்சி அவங்ககிட்ட பேசுவேன், அவங்க தர்ற ஐந்து ரூபாய்க்கு பதிலா முப்பது ரூபாய் தர்றேன் அவங்க வீட்டுக்கு வேலைக்கு போகாதிங்க அப்படின்னு சொல்வேன், அப்புறம் அவங்க பிள்ளைங்கள வெளியில கூட்டிட்டு போயி மரத்தடியில வச்சு பாடம் சொல்லி கொடுக்கிறது, தலைவர்கள் என்ற பேர்ல சிலர் வருவாங்க உடனே  அங்கிருக்கிற பெண்கள் என்ன ஒளிஞ்சுக்க சொல்வாங்க. நானும் ஒளிஞ்சுக்குவேன், சீர்காழி ரவி என்பவர் தான் எங்களுக்கு காசு பணம் உதவி செய்தார்.
வெண்மணி சம்பவத்தின் போது அண்ணா முதலமைச்சராக இருந்து என்ன நடவடிக்கை எடுத்தார்?

அரஸ்ட் பண்ணினாங்க , ஆனா அரசு ஒண்ணும் செய்யல , அந்த ஊர் மக்களே ஆந்திராவிலிருந்து நக்சலைட்டுகளை அழைச்சிட்டு வந்து கோபால கிருஷ்ணன 16 துண்டா வெட்டிப் போட்டுட்டாங்கன்னு போலீஸ் சொன்னாங்க, கோர்ட்ல ப்ருவ் பண்ண முடியல.

அரசாங்கத்தில் இருந்து ஏதாவது உதவிகள் செய்தார்களா?

 நான் தான் முதலில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்தேன், 3 ஏக்கர் இருந்தா தான் வீடு கட்ட முடியும் , நிலம் வாங்குறது ஈசியான வேலையில்லை, குறைந்தது 5 மாதமாவது போராடித்தான் வாங்கணும், நாகப்பட்டினம் தமயந்தி நாடார் பள்ளி சொந்தக்காரர் கிட்ட போராடி நிலத்தை வாங்கி அடுத்த நாளே எல்லோரையும் அழச்சி அவங்க பேர்ல ரிஜிஸ்டர் பண்ணினேன், அங்கிருந்த தலைவர்கள் அரசு 2 ஏக்கர் கொடுக்குது நீ ஏன் 1 ஏக்கர வாங்குறன்னு மக்களை திசைதிருப்பி விட்டுட்டாங்க, 70,000 ரூபாய்க்கு நிலத்தை வாங்கிட்டு பொறுமையா இருந்தேன், மூணு வருஷத்துக்கு அப்புறம் தான் நிலத்தை அவங்க எடுத்துகிட்டாங்க, எவ்வளவோ கொடுமைகளைப் பொறுத்துக்கிட்டேன் ஆனா அவங்க பேசின கொச்ச வார்த்தைகளத்தான் இன்னும் பொறுத்துக்க முடியல. 
நான் பெண்களுக்குச் சொல்றது என்னன்னா, ‘ உங்களோட சக்திய நீங்க உணருங்க. உங்களால எதையும் சாதிக்க முடியும்’ .அதனால பெண்கள், கூட்டத்துக்கு வரும்போது கையில ஒரு விளக்கையும் கொண்டு வரச் சொல்வேன், வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற ஜோதிய அவங்களால உணர முடியும்னு நான் நம்பறேன்.  

நன்றி : மணற்கேணி  , ஆகஸ்டு - செப்டம்பர் 2011  

கத்தியின்றி ரத்தமின்றி..! (கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் சுதந்திரப் போராளிகளின் வீர வரலாறு)

.............................................................கருகிய உடல்களுக்கு முன்னால் இருந்த ஜெகந்நாதனுக்குக் கோபம் வந்தது. கம்யூனிஸ்டுகளின் அணுகு முறைதான் இது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் என்று சாடினார். நான் கம்யூனிஸ்டுகள் இருப்பதால்தான் நிலைமை இவ்வளவாவது கட்டுக்குள் இருக்கிறது என்று சமாதானப்படுத்தினேன்.

கீழ்வெண்மணியில் கிருஷ்ணம்மாள் ஒரு வருட காலம் தங்கினார். கம்யூனிஸ்டுகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையில் அவர் தலித்துகளிடையே பணியாற்றினார். 1971ஆம் வருடம் அந்தக் கிராமத்தில் இருந்த 74 தலித் குடும்பங்களுக்கு 74 ஏக்கர் நிலங்களை - நல்ல விளைச்சல் விளையக் கூடிய நிலங்களை - வாங்கிக் கொடுத்தார். 1968 போராட்டத்தின் காரணம் விவசாயிகள் அரைப் படி அரிசி கூடுதல் கூலி கேட்டது என்பதை நாம் நினைவுவைத்துக்கொண்டால் இந்தச் சாதனை எவ்வளவு பிரம்மாண்டமானது என்பது நமக்கு விளங்கும்.

கீழ்வெண்மணி விவசாயிகள் இன்று சொல்கிறார்கள்:

"கிருஷ்ணம்மாளும் ஜெகந்நாதனும் எங்களுக்குச் சிவனும் பார்வதியும் போல. அரைப் படி அரிசி கூடுதலாகக் கேட்ட எங்களுக்கு அந்த நிலமே கிடைத்துவிட்டது... பொருளாதார நிலையில் நாங்கள் உயர்ந்தது என்பது எங்கள் சமூக நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது


நன்றி :: காலச்சுவடு

இந்த தளத்தில் இடம் பெறும் எந்த கட்டுரையும் தள நிர்வாகிகளின் சொந்த கருத்துக்கள் அல்ல. அந்தந்த ஆவணங்களின் உரிமை மற்றும் கருத்துக்களுக்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மற்றும் படைப்பாளியையே சாரும்.மேலும் இந்த தளம் எந்த லாப நோக்கத்தோடும் இயங்கவில்லை. ஆவணப்படுத்தலுக்கான ஒரு சேமிப்பு கிடங்கே இத்தளம்
உங்கள் பகுதி செய்திகளை இத்தளத்தில் வெளியிட admin@excludedindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்திகளை புகைப்படத்துடன் அனுப்புங்கள்
Powered by Blogger.

வகைகள்

Atrocities (3) Ayyankali (1) BBC (1) Caste discrimination (2) Conversion (1) Cuddalore (1) Daily Baskar (1) Dalitcamera (1) Devyani Kobragade (3) DICCI (1) DNA (1) Gujarat (1) Hyderabad (1) IBNLive (1) Lokpal Bill (1) Madurai (3) Protest (1) Punjab (1) READ (1) Rediff (1) SFI (1) Siddalingaiah (1) Tehelka (6) The Economic Times (2) The Hindu (10) The Indian Express (8) Times of India (8) US (1) Women (3) ZeeNews (1) அ.மார்க்ஸ் (2) அதிமுக (1) அம்பேத்கர் (3) அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்துதல் (8) அய்யன்காளி (1) அரசாணை (2) அருந்ததிய மக்கள் (2) ஆதவன் தீட்சண்யா (2) ஆம் ஆத்மி (10) ஆய்வு (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியா டுடே (1) இமையம் (1) இலக்கியம் (1) இளவரசன் (1) எவிடன்ஸ் (5) எஸ்.வி.ராஜதுரை (1) கதை (2) கரு.அழ.குணசேகரன் (1) கருத்தரங்கம் (1) கரூர் (2) கவிதை (1) கவின்மலர் (1) கன்னடா (1) காங்கிரஸ் (4) காஞ்சிபுரம் (2) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் (1) கீழ் வெண்மணி (12) கீற்று (1) கொலை (2) சத்தியம் டிவி (1) சமகல்வி இயக்கம் (1) சமநிலைச் சமுதாயம் (1) சாதிய கொலைகள் (1) சிதம்பரம் (1) சென்னை (1) சோளிங்கர் (2) தந்தி டிவி (1) தருமபுரி (2) தாக்குதல் (2) தாட்கோ (1) தி இந்து (1) திண்டுக்கல் (2) திண்ணை (1) திமுக (1) திராவிடர் கழகம் (1) திருச்சி (1) தில்லி (8) திவ்யா (1) தினகரன் (2) தினத்தந்தி (1) தினமணி (5) தினமலர் (1) தீக்கதிர் (5) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) துப்புரவுத் தொழிலாளர்கள் (1) தூத்துக்குடி (2) தேர்தல் (8) தொழிலாளர்கள் (1) நக்கீரன் (1) நத்தம்காலனி (1) நரிக்குறவ (1) நாமக்கல் (1) நிலக்கோட்டை (1) பகுஜன் சமாஜ் (2) பாமக (3) பாஜக (2) பிபிசி (1) பின் நவீனத்துவம் (2) புதிய தலைமுறை (2) புதுக்கோட்டை (2) புதுச்சேரி (3) பெத்தவன் (1) பெரியார் (1) மதமாற்றம் (1) மதிப்புரை (3) மத்தியப்பிரதேசம் (1) மறியல் (1) மனுசங்கடா ! நாங்க மனுசங்கடா !! (1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) மாலைமலர் (7) மீனா (1) ரவிக்குமார் (1) ராகுல்காந்தி (1) வன்கொடுமை (5) விசாரணைக்கைதிகள் (1) விசிக (5) விழுப்புரம் (1) வேலாயுதபுரம் (1) வேலூர் (4)

- Copyright © Excluded-India -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -