Sunday, December 22, 2013
சென்னை, டிச. 21–
சாந்தோம் நெடுஞ்சாலையை ஒட்டி மல்லிகைப்பூசேரி என்ற பகுதி உள்ளது. இங்கு 25 ஆண்டுகளாக அம்பேத்கர் பாடசாலை செயல்பட்டு வந்தது. 40 குழந்தைகள் படித்தனர். இந்த பாடசாலை, அங்கு அடுக்குமாடி கட்டுவதற்கு இடையூறாக இருப்பதாக கூறி கடந்த 14–ந்தேதி அதிகாலை இடித்து தரைமட்ட மாக்கப்பட்டது.
அந்த பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரின் ஆதரவோடு பில்டர் இந்த செயலை செய்ததாக புகார் கூறி தலித் அமைப்புகள் மைலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகார் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்காததால் இன்று உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர்.
உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் இன்று காலை திட்டமிட்டப்படி உண்ணாவிரதம் இருக்க ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் தலைமையில் பல்வேறு தலித் அமைப்புகளின் பிரதிநிதிகள் கார்த்திக், வேலுமணி, எஸ்.கே.சிவா, செல்வம், இரும்பன் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரதம் இருக்க செல்லும்போது போலீசார் அவர்களை தடுத்தனர்.
இதனால் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் கைது செய்து போலீசார் வேனில் கொண்டு சென்றனர்.
நன்றி :: மாலைமலர்