Monday, January 13, 2014

புதுடில்லி ஜன 12 2014: கடந்த 2008ம் ஆண்டு தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் தங்கிய வீட்டின் தற்போதைய நிலை குறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குமார் விஸ்வாஸ் நிருபர்களிடம் பேசினார்.

கடந்த 2008ம் ஆண்டு இப்போதைய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், தனது சொந்த தொகுதியான அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தலித் ஒருவரின் வீட்டில் தங்கிய அவர், அங்கு உணவருந்தினார். ராகுலின் இந்த செயல் காங்கிரஸ் கட்சியால் பெரிதும் பேசப்பட்டது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் இதை ஒரு அரசியல் ஸ்டன்ட் என விமர்சித்தன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி கடும் சவாலாக உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி சார்பில், எதிர்வரும் லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் குமார் விஸ்வாஸ் என்பவர் போட்டியிடவுள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே துவங்கியுள்ள விஸ்வாஸ், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குமார் விஸ்வாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொகுதியில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் நடந்துள்ளது.

இதனிடையே குமார் விஸ்வாஸ் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த 2008ம் ஆண்டு ராகுல் தலித் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, தங்கி உணவருந்திய கதைகளை கேட்டேன். அந்த வீடு தற்போது எப்படி இருக்கிறது என அறிய எனக்கு ஆவல் ஏற்பட்டது. ஆனால் அங்கு சென்ற எனக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடு எவ்வித மாற்றமும் இன்றி முன்பு போலவே காணப்பட்டது. அந்த வீட்டில் வசித்து வரும் சுனிதா என்ற பெண் என்னிடம் கூறுகையில், உ.பி.,யில் ஆளும் சமாஜ்வாடி கட்சியினர் தனது வீட்டை தீவைத்து கொளுத்தி விட்டதாகவும், தனக்கு உதவும்படி ராகுலிடம் பலமுறை கேட்டுக்கொண்டும் அவர் தனக்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என்றும் கூறினார். மக்களுக்கு உதவி செய்ய ராகுல் விரும்பவில்லை என்பதையே, சுனிதாவின் இந்த குமுறல் தெரிவிக்கிறது. அவர் அரசியல் ஸ்டன்டுக்காக மட்டுமே இங்கு தங்கியிருக்கிறார். இது மிகவும் வெட்ககரமானது". இவ்வாறு விஸ்வாஸ் தெரிவித்தார்.

செய்தி : தினமலர்

தலித் வீட்டில் சாப்பிடபோவது இல்லை ராகுல் காந்தி மீது குமார் விஸ்வாஸ் மறைமுக தாக்கு; சோனியா காந்தி மகாராணி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பேரணி நடந்து வருகிறது.

பேரணியில் பேசிய ஆம் ஆத்மியின் தலைவர் குமார் விஸ்வாஸ் காங்கிரஸ் கட்சி அமேதி தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நான் தலித் வீட்டிற்கு சென்று உணவு சாப்பிடபோவது இல்லை. மீடியாக்களை அழைத்து பெரிதுபடுத்த போவது இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, குமார் விஸ்வாஸ் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

மக்கள் என்னை ஜோக்கர் என்று அழைக்கின்றனர். மேலும், ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த ஜோக்கர் ஒரு நல்ல மனிதன். ஜோக்கர் நாட்டை விற்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

விஸ்வாஸ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மகாராணி என்று அழைத்துள்ளார். மேலும் சோனியா காந்தியின் அமெரிக்க பயணத்தை விமர்சித்துள்ளார். சோனியா ஜிக்கு நம் நாட்டில் உள்ள மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லை, பிறகு எப்படி நான் உங்களது மகன் இந்த நாட்டை சரியாக ஆட்சி செய்வார் என்று நான் நம்ப முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தி :: தினத்தந்தி

இந்த தளத்தில் இடம் பெறும் எந்த கட்டுரையும் தள நிர்வாகிகளின் சொந்த கருத்துக்கள் அல்ல. அந்தந்த ஆவணங்களின் உரிமை மற்றும் கருத்துக்களுக்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மற்றும் படைப்பாளியையே சாரும்.மேலும் இந்த தளம் எந்த லாப நோக்கத்தோடும் இயங்கவில்லை. ஆவணப்படுத்தலுக்கான ஒரு சேமிப்பு கிடங்கே இத்தளம்
உங்கள் பகுதி செய்திகளை இத்தளத்தில் வெளியிட admin@excludedindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்திகளை புகைப்படத்துடன் அனுப்புங்கள்
Powered by Blogger.

வகைகள்

Atrocities (3) Ayyankali (1) BBC (1) Caste discrimination (2) Conversion (1) Cuddalore (1) Daily Baskar (1) Dalitcamera (1) Devyani Kobragade (3) DICCI (1) DNA (1) Gujarat (1) Hyderabad (1) IBNLive (1) Lokpal Bill (1) Madurai (3) Protest (1) Punjab (1) READ (1) Rediff (1) SFI (1) Siddalingaiah (1) Tehelka (6) The Economic Times (2) The Hindu (10) The Indian Express (8) Times of India (8) US (1) Women (3) ZeeNews (1) அ.மார்க்ஸ் (2) அதிமுக (1) அம்பேத்கர் (3) அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்துதல் (8) அய்யன்காளி (1) அரசாணை (2) அருந்ததிய மக்கள் (2) ஆதவன் தீட்சண்யா (2) ஆம் ஆத்மி (10) ஆய்வு (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியா டுடே (1) இமையம் (1) இலக்கியம் (1) இளவரசன் (1) எவிடன்ஸ் (5) எஸ்.வி.ராஜதுரை (1) கதை (2) கரு.அழ.குணசேகரன் (1) கருத்தரங்கம் (1) கரூர் (2) கவிதை (1) கவின்மலர் (1) கன்னடா (1) காங்கிரஸ் (4) காஞ்சிபுரம் (2) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் (1) கீழ் வெண்மணி (12) கீற்று (1) கொலை (2) சத்தியம் டிவி (1) சமகல்வி இயக்கம் (1) சமநிலைச் சமுதாயம் (1) சாதிய கொலைகள் (1) சிதம்பரம் (1) சென்னை (1) சோளிங்கர் (2) தந்தி டிவி (1) தருமபுரி (2) தாக்குதல் (2) தாட்கோ (1) தி இந்து (1) திண்டுக்கல் (2) திண்ணை (1) திமுக (1) திராவிடர் கழகம் (1) திருச்சி (1) தில்லி (8) திவ்யா (1) தினகரன் (2) தினத்தந்தி (1) தினமணி (5) தினமலர் (1) தீக்கதிர் (5) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) துப்புரவுத் தொழிலாளர்கள் (1) தூத்துக்குடி (2) தேர்தல் (8) தொழிலாளர்கள் (1) நக்கீரன் (1) நத்தம்காலனி (1) நரிக்குறவ (1) நாமக்கல் (1) நிலக்கோட்டை (1) பகுஜன் சமாஜ் (2) பாமக (3) பாஜக (2) பிபிசி (1) பின் நவீனத்துவம் (2) புதிய தலைமுறை (2) புதுக்கோட்டை (2) புதுச்சேரி (3) பெத்தவன் (1) பெரியார் (1) மதமாற்றம் (1) மதிப்புரை (3) மத்தியப்பிரதேசம் (1) மறியல் (1) மனுசங்கடா ! நாங்க மனுசங்கடா !! (1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) மாலைமலர் (7) மீனா (1) ரவிக்குமார் (1) ராகுல்காந்தி (1) வன்கொடுமை (5) விசாரணைக்கைதிகள் (1) விசிக (5) விழுப்புரம் (1) வேலாயுதபுரம் (1) வேலூர் (4)

- Copyright © Excluded-India -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -