Friday, January 10, 2014
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது-60). தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்துவரும் இவர் ஆங்கிலப் புத்தாண்டு நாளான புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் தன்னுடைய வீட்டிலிருந்து சைக்கிளில் தோட்டத்துக்கு சென்றார்.
அப்போது, அந்த பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் புத்தாண்டை வரவேற்று சாலையில் வாசகங்கள் எழுதிக் கொண்டிருந்தனராம். இதில் ஒரு இளைஞர் மீது பழனியப்பன் சைக்கிள் மோதி விட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பழனியப்பன் தனது கையில் வைத்திருந்த மண்வெட்டியால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது-23) என்ற இளைஞரின் தலையில் அடித்ததுடன், அங்கிருந்த மூன்று இளைஞர்களின் “சாதி” பெயரைச் சொல்லியும் திட்டினாராம்.
இதில், காயமடைந்த பிரபாகரன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து பிரபாகரன் மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், பழனியப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், பா.ம.க ஆகிய கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் மோகனூர் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டன்ர.
தொடர்ந்து, முறையான விசாரணையின்றி யார்மீதும், போலீசார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்றும், விவசாயி பழனியப்பன் மீது பி.சி.ஆர் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரி முழக்கமிட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, அங்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சமுதாயக் கட்சியினரின் கோரிக்கைகளை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும், அதன் பின்னரே விவசாயி பழனியப்பன் மீது நடவடிக்கை எடுபதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, கட்சியினர் முற்றுகை போராட்டதைக் கைவிட்டு, நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாளிடம் சென்று மனு அளித்தனர்.
செய்தி :: நக்கீரன்