Thursday, December 5, 2013


திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.முத்துச்சாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான், அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன், ஆதித்தமிழர் மக்கள் கட்சி மாநிலத்தலைவர் எஸ்.டி.கல்யாணசுந்தரம், தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாநிலத் தலைவர் நாகை.திருவள்ளுவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே.சின்னக்கருப்பன், மாவட்டத் துணைத்தலைவர் கே.அருள்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல். டிச. 5-
திண்டுக்கல் மாவட்டத்தில் அருந்ததிய மக்கள் மீது சாதி ஆதிக்கசக்திகள் நடத்திய வன்கொடுமைத் தாக்குதல் தொடர்பாக உரிய நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை தாலுகா நடுப்பட்டியில் தலித் அருந்ததிய மக்கள் மீது நடை பெற்ற தாக்குதலைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் அமைப்புகள் சார்பாக வியாழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய கண்டன உரை வருமாறு:
நிலக்கோட்டைத் தாலுகா கரியாம் பட்டி அருகேயுள்ள நடுப்பட்டியில் உள்ள தலித் மக்கள் வீடுகள் மீது சாதி ஆதிகக்க வெறியர்கள் தாக்குதலில் ஈடு பட்டதால் 6 குடிசைகள் முழுமையாக எரிக்கப்பட்டுள்ளன. ஓட்டுவீடுகள் அடித்து நொறுக்கப் பட்டுள்ளன. தலித் மக்கள் படுகாய மடைந்துள்ளனர்.
இத்தகைய தீண்டா மை வன்கொடுமை நடத்தியவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட் டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
சிலுக்குவார்பட்டி : தலித் மக்களுக்கென ஒதுக்கப் பட்ட சிலுக்குவார்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும். மாநிலம் முழுவதும் நடைபெறும் தீண்டாமைக் கொடுமைகள் மற்றும் தலித் மக்கள் மீதான தாக்குதலில் ஈடுபடும் சாதி ஆதிக்க சக்திகள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடுப்பட்டி : மேலும் நடுப்பட்டியில் தலித் மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து பால்பண்ணை அமைத்துள்ளனர் சாதி ஆதிக்க சக்திகள். அந்த நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டதன் அடிப்படையில் தலித் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி யுள்ளார்கள்.
தலித் மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். தலித் மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.நடுப்பட்டியில் பாதிக்கப்பட்ட தலித் அருந்ததியர் மக்களை கே.பாலபாரதி எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ஆனால், பாலபாரதி எம்எல்ஏ கலவரத்தைத் தூண்டுவதாக திண்டுக்கல்லில் பாமக தலைமையில் சில அமைப்புகள் கூடி கருத்து தெரிவித் துள்ளன. ஒடுக்கப்பட்ட மக்கள், தலித் மக்கள் பாதிக்கப்படும் போது அங்கு ஓடோடிச் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஆறுதல் கூறுகிறார்கள். இது பெரியார் பிறந்தமண், இடதுசாரிகளின் செங்கொடி இயக்கம் வளர்த்த பூமி.
இங்கு ராமதாஸ் போன்றவர்களின் சாதி ஆதிக்கசிந்தனை எடுபடாது. பாட்டாளி மக்கள் கட்சி நடத்துகிற இயக்கங்களையொட்டி வெளியிடப்படும் போஸ்டர்களில் காரல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் உருவப்படங்களை அவர் அச்சிட்டு வெளியிட்டு வந்தார். அரசியல் ஆதாயத்திற்காக தற்போதுசாதிய அரசியல் நடத்தி வருகிறார்.1947ம் ஆண்டுக்குப் பிறகு அண்ணல் அம்பேத்கார் வகுத்த அரசியல் சாசனம்,இந்தியாவில் தீண்டாமை ஒழிக்கப் பட்டதாக அறிவித்தது.
பிறகு குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் வந்தது. தீண்டாமை கடைப்பிடிப்போரின் மீது பிரயோகிக்க தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் தீண்டாமைக்கு எதிராக எத்தனை சட்டங் கள் இயற்றப்பட்டாலும் தீண்டாமைக் கொடுமையை இன்னும் ஒழிக்க முடியவில்லை. இன்னும் கிராமங்களில் இரட்டை டம்ளர் வடிவத்திலும், ஆலயங் களில் தலித் மக்கள் நுழைய முடியாமலும், ஆதிக்க சாதியினர் தெருக்களின் வழியே செருப்பு போட்டு நடக்க முடியாமலும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை நிலவுகிறது.
இந்த கொடுமைகள் நிலவும் கிராமத்தில் சட்டத்தை அமலாக்கும் பொறுப்பும், தலித் மக்களை பாதுகாக்கும் கடமையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும், மாவட்ட ஆட்சி யருக்கும் உண்டு.தருமபுரியில் சாதி ஆதிக்க சக்திகளால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து நிவாரண மாக ரூ.7 கோடியை பெற்றுத் தந்தது. மேலும் தலித் அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை பல்வேறு போராட்டங்களை நடத்தி நாம் பெற்றோம்.
அந்த உள் இட ஒதுக்கீடு தொடர் பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வருகிற 27ம் தேதி விசாரணைக்கு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் கலந்து கொண்டு வாதாட உள்ளார். நடுப்பட்டியில் தலித் மக்கள் மீதுநடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு போட் டுள்ளது. இரண்டு தரப்பினரையும் ஒன்றாக ஒப்பீடு செய்வது பொருத்தமற்றதாகும். தலித் மக்கள் மீது நடத்தப்பட்டிருப்பது வன்கொடுமைத் தாக்குதல்.
எனவே அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்படி வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காதல் திருமணங்கள், கலப்பு திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள் புரிவோரின் வாரிசுகளுக்கு கல்வி,வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க அரசு முன்வரவேண்டும்.கரியாம்பட்டியில் தாக்குதலுக்கு உள் ளான தலித் மக்கள் மீதே கொலை முயற்சி பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.
இவ்வழக்கை கைவிட வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் நாங்கள் வைக் கும் கோரிக்கைகள் மீது உடனடியாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டக் காவல்த்துறைக் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இது மாநிலந்தழுவிய போராட்ட மாக மாறும்.இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசி னார். (ந.நி.)

நன்றி :: தீக்கதிர்

இந்த தளத்தில் இடம் பெறும் எந்த கட்டுரையும் தள நிர்வாகிகளின் சொந்த கருத்துக்கள் அல்ல. அந்தந்த ஆவணங்களின் உரிமை மற்றும் கருத்துக்களுக்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மற்றும் படைப்பாளியையே சாரும்.மேலும் இந்த தளம் எந்த லாப நோக்கத்தோடும் இயங்கவில்லை. ஆவணப்படுத்தலுக்கான ஒரு சேமிப்பு கிடங்கே இத்தளம்
உங்கள் பகுதி செய்திகளை இத்தளத்தில் வெளியிட admin@excludedindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்திகளை புகைப்படத்துடன் அனுப்புங்கள்
Powered by Blogger.

வகைகள்

Atrocities (3) Ayyankali (1) BBC (1) Caste discrimination (2) Conversion (1) Cuddalore (1) Daily Baskar (1) Dalitcamera (1) Devyani Kobragade (3) DICCI (1) DNA (1) Gujarat (1) Hyderabad (1) IBNLive (1) Lokpal Bill (1) Madurai (3) Protest (1) Punjab (1) READ (1) Rediff (1) SFI (1) Siddalingaiah (1) Tehelka (6) The Economic Times (2) The Hindu (10) The Indian Express (8) Times of India (8) US (1) Women (3) ZeeNews (1) அ.மார்க்ஸ் (2) அதிமுக (1) அம்பேத்கர் (3) அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்துதல் (8) அய்யன்காளி (1) அரசாணை (2) அருந்ததிய மக்கள் (2) ஆதவன் தீட்சண்யா (2) ஆம் ஆத்மி (10) ஆய்வு (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியா டுடே (1) இமையம் (1) இலக்கியம் (1) இளவரசன் (1) எவிடன்ஸ் (5) எஸ்.வி.ராஜதுரை (1) கதை (2) கரு.அழ.குணசேகரன் (1) கருத்தரங்கம் (1) கரூர் (2) கவிதை (1) கவின்மலர் (1) கன்னடா (1) காங்கிரஸ் (4) காஞ்சிபுரம் (2) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் (1) கீழ் வெண்மணி (12) கீற்று (1) கொலை (2) சத்தியம் டிவி (1) சமகல்வி இயக்கம் (1) சமநிலைச் சமுதாயம் (1) சாதிய கொலைகள் (1) சிதம்பரம் (1) சென்னை (1) சோளிங்கர் (2) தந்தி டிவி (1) தருமபுரி (2) தாக்குதல் (2) தாட்கோ (1) தி இந்து (1) திண்டுக்கல் (2) திண்ணை (1) திமுக (1) திராவிடர் கழகம் (1) திருச்சி (1) தில்லி (8) திவ்யா (1) தினகரன் (2) தினத்தந்தி (1) தினமணி (5) தினமலர் (1) தீக்கதிர் (5) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) துப்புரவுத் தொழிலாளர்கள் (1) தூத்துக்குடி (2) தேர்தல் (8) தொழிலாளர்கள் (1) நக்கீரன் (1) நத்தம்காலனி (1) நரிக்குறவ (1) நாமக்கல் (1) நிலக்கோட்டை (1) பகுஜன் சமாஜ் (2) பாமக (3) பாஜக (2) பிபிசி (1) பின் நவீனத்துவம் (2) புதிய தலைமுறை (2) புதுக்கோட்டை (2) புதுச்சேரி (3) பெத்தவன் (1) பெரியார் (1) மதமாற்றம் (1) மதிப்புரை (3) மத்தியப்பிரதேசம் (1) மறியல் (1) மனுசங்கடா ! நாங்க மனுசங்கடா !! (1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) மாலைமலர் (7) மீனா (1) ரவிக்குமார் (1) ராகுல்காந்தி (1) வன்கொடுமை (5) விசாரணைக்கைதிகள் (1) விசிக (5) விழுப்புரம் (1) வேலாயுதபுரம் (1) வேலூர் (4)

- Copyright © Excluded-India -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -