Thursday, December 5, 2013
ஒன்று பார்ப்பனியம்; இரண்டு முதலாளியம். பார்ப்பனியம் எனும் எதிரியை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லும் போது என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரங்கள், உரிமைகள், நலன்கள் பெறுவதை மட்டும் நான் பார்ப்பனியம் என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கின்றேன். இந்த எதிர்மறை உணர்வு எல்லா வகுப்பினரிடையேயும் உள்ளது. பார்ப்பனர்களோடு மட்டும் அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள்தாம் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவியுள்ளது என்பது உண்மை.
இந்தப் பார்ப்பனியம் எங்கும் பரவி, எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம் சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது. மற்ற வகுப்புகளுக்குச் சம வாய்ப்புகளை மறுக்கிறது...
- டாக்டர் அம்பேத்கர்